'நிறையா பேருக்கு வேல போயிடுச்சுனு பயப்படாதீங்க!.. இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்'!.. பிரபல ஐடி நிறுவனம் சொன்ன 'சூப்பர் குட் நியூஸ்'!!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கொரோனா தாக்கத்தால் இந்திய ஐடி துறை பாதிப்புகளை சந்திக்காது என்றும், வேலைவாய்ப்புகளை அள்ளி வழங்க காத்திருக்கிறது என்றும், TCS நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், "இந்தியாவில் வேலைவாய்ப்புகளை கொட்டிக் கொடுக்கும் துறையாக ஐடி திகழ்கிறது. கொரோனா தாக்கத்தால் ஐடி நிறுவனங்கள் நெருக்கடிகளை சந்தித்தபோதிலும், இனிவரும் காலங்களில் ஐடி துறை மிகப்பெரிய உயரங்களைத் தொடும். தகவல் தொழில்நுட்பத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கச் செய்யுமே தவிர, குறைய வாய்ப்பில்லை.

இன்று வேலை தேடி அலையும் பட்டதாரிகள், மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் பயிலவில்லை என்றால் பரவாயில்லை. அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். தற்போது அனைத்து கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களும், ஒரே தராசில் வைத்து தான் மதிப்பிடப்படுகிறார்கள்.

முன்னர் இருந்து நிலைமையை விட, இது மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகளைத் தேடிக்கொடுக்கும். உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்