'எங்க கம்பெனியில வொர்க் பண்றவங்க...' 'யாராச்சும் கொரோனாவால இறந்துட்டாங்கன்னா...' 'அவங்களோட 60 வயது வரை முழு சம்பளத்தை கொடுப்போம்...' - சலுகைகளை அறிவித்த 'பிரபல' கம்பெனி...!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா வைரஸ் முதல் அலை முடிந்து இரண்டாவது அலை இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல பெரிய நிறுவனங்களும், சிறு நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களை பொதுமானவரை குறைத்து வந்தனர். இதனால் பல குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரங்களையும் இழக்கும் நிலை ஏற்பட்டது.
ஆனால் டாடா ஸ்டீல் நிறுவனமோ தங்களின் ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் ஆதரவு தரும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், டாடா ஸ்டீல் நிறுவன ஊழியர்கள் யாரேனும் கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தால், அவரின் குடும்பத்திற்கு ஊழியர் ஓய்வு பெறும் 60 வயது வரையில் அவரின் சம்பளம் முழுமையாக ஒவ்வொரு மாதமும் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் முன்னெச்சரிக்கையாக, ஊழியரின் குடும்பத்திற்கு மருத்துவக் காப்பீடு மற்றும் தங்கும் வசதிகள் செய்து தரப்படுவதாக டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது.
மேலும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முன்கள ஊழியர் யாரேனும் கொரோனா மூலம் உயிரிழந்தால், ஊழியரின் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளின் கல்விச் செலவை பட்டம் பெறும் வரையில் நிர்வாகமே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நாங்க 'விசாரணைய' இன்னும் தீவிரப்படுத்துவோம்...! 'எங்களுக்கு எந்த சந்தேகமும் கிடையாது...' கொரோனா 'அங்க' இருந்து தான் பரவிச்சு...! - அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்...!
- பறந்து பறந்து கல்யாணம்...! 'விமானத்தை கல்யாண மண்டபமாக்கிய ஜோடி...' - எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் விமான ஊழியர்களுக்கு கெடச்ச 'ஷாக்' தகவல்...!
- முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு Martin Group உதவி!
- தலைசுற்ற வைக்கும் காய்கறி விலை!.. ஒரே இரவில்... ராக்கெட் வேகத்தில் உயர்வு!.. எப்படி நடந்தது?
- BREAKING: தமிழகத்தில் ஒரு வாரம் 'தளர்வுகளற்ற' முழு ஊரடங்கு...! 'தமிழக அரசு அறிவிப்பு...' - முழு விவரங்கள்...!
- தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா...? 'வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்...' - மருத்துவர்கள் குழுவுடன் முதல்வர் சந்திப்பு...!
- ஆசிரியர்களுக்கு 'சம்பளம்' பாதியாக குறைக்கப்படுகிறதா...? - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கொடுத்த பதில்...!
- 'காத்திருந்த சந்தோசமான செய்தி'... 'ஆனா இந்த நிலைமை எந்த குடும்பத்துக்கும் வர கூடாது'... 'ஒரு பக்கம் கணவன், மறுபக்கம் மனைவி'... நெஞ்சை நொறுக்கும் சம்பவம்!
- இந்த 'வெப்சைட்' உள்ள போனீங்கன்னா... 'பக்கத்துல எந்த ஹாஸ்பிட்டல்ல காலி பெட் இருக்குன்னு...' - எல்லா தகவல்களும் ஈஸியா தெரிஞ்சிடும்...!
- 'தமிழகத்தில் முழு ஊரடங்கு மே 31 வரை நீட்டிப்பா'?... 'மருத்துவ நிபுணர் குழுவுடன் நடைபெறவுள்ள ஆலோசனை'... முக்கிய முடிவுகள் வெளியாகும் என தகவல்!