'கஸ்டமர்ஸ்' தான் முக்கியம்... பிரபல நிறுவனம் செய்த 'அதிரடி' வேலை... ஜீ நீங்க உண்மையிலேயே 'வேற' லெவல்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை 31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இதனால் மக்கள் பொது இடங்களுக்கு செல்லவே அஞ்சும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் முன்னணி நிறுவனங்கள் பலவும் கம்பெனியை இழுத்து மூடிவிட்டு ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யுமாறு கேட்டுக்கொண்டு இருக்கின்றன.

பொருளாதாரம், உயிரிழப்பு என பல்வேறு வழியிலும் கொரோனா வைரசால் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. கொரோனா காரணமாக முகமூடி, சானிடைஸர், கிளவுஸ் ஆகியவற்றின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் முகமூடிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த நிலையில் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு உணவுடன் சேர்த்து கைகழுவும் சானிடைஸர் பாக்கெட் ஒன்றையும் இலவசமாக வழங்கி வருகிறது. இதை பிரவீன் என்னும் வாடிக்கையாளர் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட அது தற்போது வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது.

அதில் அவர்,'' ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்தேன். அவர்கள் சானிடைஸரையும்  சேர்த்து டெலிவரி செய்துள்ளனர். இது உண்மையிலேயே ஒரு பெரிய நிகழ்வு,'' என பாராட்டி இருக்கிறார். பதிலுக்கு ஸ்விக்கி, '' நேரம் ஒதுக்கி எங்கள் முயற்சியை பாராட்டியதற்கு நன்றி. இந்த சோதனையான காலத்தில் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிப்பது முக்கியமானது,'' என பதிலளித்து இருக்கிறது. 

SWIGGY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்