'ஐயோ, சும்மா இல்லீங்க மனசுக்குள்ள அவ்வளவு பயம் இருக்கும்'... 'Swiggy எடுத்திருக்கும் அதிரடி முடிவு'... நெகிழ்ந்துபோன ஊழியர்கள்!
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்த கொரோனா காலகட்டத்தில் மனதில் ஒரு வித பயத்துடன் தான் டெலிவரி செய்ததாக swiggy ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா காலகட்டத்தில் முன்கள பணியாளர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என பலரும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் உணவு டெலிவரியில் ஈடுபட்ட ஊழியர்களின் பணியையும் மறக்க முடியாது.
பொது முடக்கக் காலகட்டத்தில் குடும்பத்தை விட்டு தனியாக இருந்த இளைஞர்கள் மற்றும் தனியாக வசித்து வந்த வயதானவர்கள் எனப் பலருக்கும் உரிய நேரத்தில் உணவைச் சேர்த்து தங்களால் முடிந்த பணியைச் செய்தார்கள். அந்த வகையில் தங்கள் நிறுவனத்துடன் இணைந்து உணவு வழங்கும் சேவையில் ஈடுபட்டுள்ள இரண்டு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆகும் செலவினை ஏற்றுக்கொள்வதாக ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
முதல்கட்டமாக 45 மற்றும் அதற்கு மேல் வயதுடைய 5 ஆயிரத்து 500 ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது என்று முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விவேக் சுந்தர் தெரிவித்துள்ளார். நிறுவனம் எடுத்துள்ள இந்த முடிவிற்கு முன்னுரிமை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தங்கள் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதனால் ஏற்படும் வருமான இழப்பினையும் ஈடுகட்ட முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்கிடையே ஸ்விக்கி எடுத்துள்ள இந்த முடிவால் மகிழ்ச்சி அடைந்துள்ள அதன் ஊழியர்கள், இதனால் பயம் விலகி நாங்கள் தைரியமாக எங்கள் பணியைச் செய்யலாம் எனக் கூறியுள்ளார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- #BREAKING: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி...!
- ‘தயாராகிவிடுங்கள்’!.. முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திய பின் ‘கமல்ஹாசன்’ அதிரடி டுவீட்..!
- 'கொரோனா தடுப்பூசி போட வாங்க...' 'உங்களுக்கு செம ஆஃபர் வச்சுருக்கோம்...' - இஸ்ரேல் பாரின் வியக்க வைக்கும் செயல்...!
- மியாட் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்..!
- 'அப்பாவிடம் இருந்து மகளுக்கு வந்த நோய்'... 'குடும்பத்தை காணமுடியாமல் பட்ட வேதனை'... ஆனா உச்சக்கட்ட மகிழ்ச்சியை கொடுத்த ஒரே ஒரு ஊசி !
- 'ரிஹானாவின் தாய்நாட்டிற்கு...' 'ஒரு லட்சம் டோஸ் கோவிஷீல்டு...' - பார்படோஸ் பிரதமர் இந்திய பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம்...!
- 'பசி வயிற்றை கிள்ள உணவுக்காக காத்திருந்த பெண்'... 'திடீரென 'ஸ்விகி' அனுப்பிய மெசேஜ்'... 'என்னடா நடக்குது'ன்னு கடுப்பான பெண்!!
- VIDEO: பாதுகாப்பு, நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த நானும் ‘தடுப்பூசி’ போட்டுக்கிறேன்.. சீரம் ‘சிஇஓ’ அசத்தல்..!
- தமிழகத்தில் நாளை முதல் கொரோனா தடுப்பூசி!.. பின்விளைவுகள் வருமா?.. தடுப்பூசி குறித்து மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
- கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் 28 நாள் ‘இதை’ தொடவேகூடாது.. அமைச்சர் விஜயபாஸ்கர் முக்கிய தகவல்..!