எலான் மஸ்கின் தளபதி .. மஸ்க்கின் முக்கிய முடிவுகளுக்கு பின்னால் இருக்கும் தமிழர்.. யாருப்பா இவரு?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். இந்நிலையில், அவருக்கு தமிழர் ஒருவர் உதவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | T20 World Cup: அடித்து ஆடும் மழை.. ICC வச்சிருக்கும் பக்கா பிளான்.. ஆனா அதுவும் இந்த போட்டிகளுக்கு மட்டும் தானாம்..!

அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

முன்னதாக 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், போலி கணக்குகள் பற்றி தகவல்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிடவில்லை எனக்கூறி நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார் மஸ்க். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் ட்விட்டரை கைப்பற்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் மஸ்க்.

இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாக பொறுப்புகளில் எடுக்கப்படும் முடிவுகளில் மஸ்க்கிற்கு தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் என்பவர் உதவி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில்,"ட்விட்டர் நிறுவனத்தில் தற்காலிகமாக எலான் மஸ்கிற்கு உதவி வருகிறேன். என்னோடு இணைந்து வேறு சிலரும் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். இது மிகவும் முக்கியமான நிறுவனம். உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதும் கூட. மஸ்க், அதை சாத்தியமாக்குவார் என்றும் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த ஸ்ரீராம் சென்னையிலேயே பொறியியல் முடித்திருக்கிறார். இவர் மைக்ரோசாப்ட், பேஸ்புக், ட்விட்டர், ஸ்னாப்சாட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது ஆண்ட்ரசன் ஹாரோவிட்ஸ் (a16z) நிறுவனத்தில் பொது பங்குதாரராக உள்ள ஸ்ரீராம் பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடும் செய்து வருகிறார். அவ்வப்போது தனது மனைவி ஆர்த்தி ராமமூர்த்தியுடன் இணைந்து பாட்காஸ்ட்களையும் இவர் ஹோஸ்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | தாய்மையை போற்றிய பெண் காவலர்.. முகமறியாத குழந்தைக்கு தாயான நெகிழ்ச்சி சம்பவம்..!

ELON MUSK, SRIRAM KRISHNAN, TWITTER OFFICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்