'இந்தியாவில் சரிவை சந்தித்துள்ள டாப் 5 சாஃப்ட்வெர் கம்பெனிகள்...' 'புதுசா வேலைக்கு ஆள் எடுக்குறத குறைச்சிட்டோம்...' - பிரபல ஐடி நிறுவனங்கள் தகவல்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்தியாவில் தலை சிறந்த முதல் 5 மென்பொருள் நிறுவனங்கள், கொரோனா தாக்கத்தால் அதன் காலாண்டு லாபத்தில் சரிவை கண்டுள்ளது.
இந்தியாவின் முதன் 5 தலைசிறந்த மென்பொருள் நிறுவங்களாக டி.சி.எஸ், இன்போசிஸ், எச்.சி.எல் டெக், விப்ரோ மற்றும் டெக் மஹிந்திரா திகழ்கிறது. மேலும் வருடா வருடம் அதிக எண்ணிக்கையில் ஊழியர்களை தேர்வு செய்யும் ஐ டி நிறுவனங்கள் என கொடிகட்டி பறந்தன.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து தொழில் நிறுவனங்களும் சரிவை சந்தித்து வருகின்றனர். மேலும் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ள காலாண்டில், டி.சி.எஸ்-ஸின் தலைமையகம் தங்களின் மொத்த ஊழியர்களில் இருந்து 4,786 பேரையும், இன்போசிஸ் 3,138 பேரையும், எச்.சி.எல் டெக் 136 பேரையும், விப்ரோ 1082 பேரையும், டெக் மஹிந்திரா 1820-க்குள் ஆட்களை குறைந்துள்ளது. மொத்தத்தில் சுமார் 10,962 பேர் இந்த மென்பொருள் நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து இன்போசிஸ் வருவாய் அதிகாரி சி.ஓ.ஓ பிரவீன் ராவ், பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூறுகையில் "கொரோனா தாக்கம் நிறைந்த இந்த காலாண்டில் எங்கள் நிறுவனத்தில் உலகளவில் சுமார் 5000-க்கும் மேற்பட்டோரை பணியமர்த்தியுள்ளோம். எங்களுக்கு இது புதிய இயல்பின் ஒரு பகுதியாக மாறும், ஏனென்றால் இந்த தொற்றுநோய் இன்னும் சில காலம் நீடிக்கும், ஆனால் இவற்றை கடந்து முன்னேறி நாம் செல்லவேண்டும்.' எனக்கூறினார்.
டெக் மஹிந்திரா சி.எஃப்.ஓ மனோஜ் பட் கூறுகையில், புதிய ஊழியர்களை பணியமர்த்தல் முறை தற்போது வெகுவாக குறைந்து விட்டது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விப்ரோ சி.எஃப்.ஓ ஜடின் தலால் அவர்கள் கூறுகையில், 'நாங்கள் வருவாய்க்கு வேலைக்கு அமர்த்துவோம், ஆகையால் வெளிப்புறமாக வேலைக்கு அமர்த்த வேண்டிய அவசியம் இருந்தால் நாங்கள் அதை நிச்சயமாக பார்ப்போம். மேலும் எங்களிடம் நம்பிக்கையுள்ள, திறனுள்ள ஊழியர்கள் நிறைய பேர் உள்ளனர், எங்களுக்கு மாறுபட்ட பணியாளர்களின் விலை தேவையில்லை. எனவே, நாங்கள் அந்த மாறுபட்ட பணியாளர்களைக் குறைத்து, எங்கள் சொந்த ஊழியர்களை வாடிக்கையாளர் தேவைகளுக்கு சேவை செய்ய வைக்கிறோம்.' எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்