ஒரு செகண்ட்ல ‘5 லட்சம்’ ஆர்டர்.. டெலிவரி பாய் ‘தட்டுப்பாடு’.. உலகை திரும்பி பார்க்க வச்ச ‘பிரபல’ நிறுவனம்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்அமேசானின் பிக் பில்லியன், பிரைம் டேவை பின்னுக்கு தள்ளி அலிபாபா நிறுவனத்தின் ‘சிங்கிள்ஸ் டே’ ஷாப்பிங் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
சீனாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா, கடந்த நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை ‘சிங்கிள்ஸ் டே’ (Singles Day) என்ற ஆஃப்ரை வழங்கியது. மொத்தமாக 16 மில்லியன் அமெரிக்க டாலர்களை தள்ளுபடி செய்து இந்த விற்பனை அலிபாபா நிறுவனம் நடத்தியது.
இதன் மூலம் சுமார் 74 பில்லியன் அமெரிக்க டாலர்களை அந்நிறுவனம் ஈட்டியுள்ளது. இது அமேசான் நிறுவனம் கொண்டு வந்த சர்வதேச பிரைம் டே, பிக் பில்லியன் டே விற்பனையை விட பல மடங்கு அதிகம் என சொல்லப்படுகிறது.
மக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆன்லைனில் ஷாப்பிங் செய்ததே அலிபாபாவின் வியாபார வெற்றிக்கு காரணம் என சக இ-காமர்ஸ் நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் சீனாவின் மற்ற இ-காமர்ஸ் நிறுவனங்களும் அதிகளவில் விற்பனை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் டெலிவரி பாய் தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு விற்பனை நடந்ததாக கூறப்படுகிறது. இதில் ஒரு செகண்ட்டில் 5,83,000 பேர் ஆர்டர் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்