'முகேஷ் அம்பானிக்கு காத்திருந்த அதிர்ச்சி'... 'இப்படி ஒரு முறைகேடா'?... செபி காட்டிய அதிரடி!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானிக்கு 15 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியப் பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியமான செபி, பங்கு வர்த்தக மோசடிகளைக் கண்காணித்து அதில் மோசடியில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2007 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனம், தனது பெட்ரோலிய நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்தது. அந்த விற்பனையில் மோசடி நடந்துள்ளதாகச் செபி கண்டுபிடித்துள்ளது.

அதாவது ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் 4.1 சதவீத பங்குகளைப் பங்குவர்த்தகத்தைப் பாதிக்கும் வகையில் அது வீழ்ச்சி அடைந்த நேரத்தில் வாங்கி, விற்பனை செய்திருந்தது செபி விசாரணையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 25 கோடி ரூபாயும், அதன் தலைவரான முகேஷ் அம்பானிக்கு 15 கோடி ரூபாயும் செபி அபராதம் விதித்துள்ளது.

அதோடு மேலும் இரண்டு நிறுவனங்கள் 20 மற்றும் 10 கோடி ரூபாய் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். செபி வெளியிட்டுள்ள 95 பக்க அறிக்கையில், 2007இல் ரிலையன்ஸ் பெட்ரோலிய லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விவகாரத்தில் முறைகேட்டைச் செய்தமைக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு 15 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொழில் துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்