சேமிப்புக் கணக்கு முதல் UPI, RuPay வரையில்… எது எதுக்கு என்ன ‘சார்ஜிங் கட்டணம்’..?- SBI விளக்கம்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

சேமிப்புக் கணக்குகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிப்பது இல்லை என ஸ்டேட் பாரத வங்கி (SBI) விளக்கம் கொடுத்துள்ளது. சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் UPI, RuPay வழியாக பணப் பரிவர்த்தனைகள் மேற்கொண்டாலும் கட்டணங்கள் விதிக்கப்படுவதில்லை என்கிறது எஸ்பிஐ.

Advertising
>
Advertising

SBI கொடுத்துள்ள அறிவிப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் சுமார் 16 கோடிக்கும் அதிகமானோர் அடிப்படை சேமிப்புக் கணக்குகளிஅ வைத்துள்ளனர். அவற்றுள் FI வாடிக்கையாளர்கள் மட்டும் சுமார் 14 கோடி பேர். சமீபத்தில் ஐஐடி ஆய்வு ஒன்றை அடிப்படையாக வைத்து எஸ்பிஐ குறித்த செய்தி ஒன்று வெளியானது. அந்த ஆய்வின் அடிப்படையில், ஏப்ரல் 2017 முதல் டிசம்பர் 2019 வரையில் ‘பிரதான் மந்த்ரி ஜன் தன் யோஜனா’ திட்டத்தின் கீழ் கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பிக் கொடுக்கும் உள்ள எஸ்பிஐ-க்கு நிலுவையில் 164 கோடி ரூபாய் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

UPI, RuPay வழியாக பணப் பரிவர்த்தனைகள் மேற்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு அரசு உத்தரவின் அடிப்படையில் இதுவரையில் 90 கோடி ரூபாய் மட்டுமே திருப்பிக் கொடுக்கப்பட்டு உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது. ‘பிரதான் மந்த்ரி ஜன் தன் யோஜனா’ திட்டத்தின் கீழ் அடிப்படை வங்கிக் கணக்கு தொடங்கிய வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 2017 முதல் செப்டம்பர் 2020 வரையில் மேற்கொண்ட UPI, RuPay வழியான பணப்பரிவர்த்தனைகளுக்கு SBI வங்கி ஒரு பணப் பரிவர்த்தனைக்கு 17.70 ரூபாய் என இதுவரையில் சுமார் 14 கோடி பேரிடம் இருந்து 254 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என அந்த ஐஐடி ஆய்வு கூறுகிறது.

ஆனால், SBI கடந்த நவம்பர் 23-ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் UPI, RuPay வழியாக பணப் பரிவர்த்தனைகள் மேற்கொண்டாலும் கட்டணங்கள் விதிக்கப்படுவதில்லை” என விளக்கம் கொடுத்துள்ளது. மேலும் எஸ்பிஐ அறிக்கையில், “அரசு திட்டங்கள் மூலம் பலர் எஸ்பிஐ வங்கியில் அடிப்படை சேமிப்புக் கணக்குகளைத் தொடங்கி உள்ளனர். இவர்களுக்கான அத்தனை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எஸ்.எம்.எஸ் சேவைகள் மற்றும் குறைந்தபட்ச பண இருப்பு ஆகியவற்றுக்கான கட்டணத்தையும் அத்தனை அடிப்படை சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கும் நீக்கப்பட்டுள்ளது. இதனால், அடிப்படை சேமிப்புக் கணக்கு வைத்து இருக்கும் வாடிக்கையாளர்கள் எந்தவொரு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கும் UPI, RuPay பரிவர்த்தனைகள் உட்பட கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என தெளிவுரை கொடுக்கப்பட்டுள்ளது.

MONEY, SBI, UPI, RUPAY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்