SBI புது ரூல்ஸ்... மாறும் imps லிமிட்.‌.. கட்டணங்களும் மாறுகிறது!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

SBI வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் நீங்கள் என்றால் உங்கள் வங்கி சார்ந்து ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள், மாறுதலுக்குட்பட்ட கட்டணங்கள் என அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.

Advertising
>
Advertising

இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளுள் ஒன்றாக இருக்கும் SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கான IMPS பரிவர்த்தனைகளின் லிமிட்டை அதிகரித்துள்ளது. இதன் மூலம் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி வரும் காலங்களில் அதிகப்பட்சமாக 5 லட்சம் ரூபாய் வரையில் பணப் பரிவர்த்தனைகள் செய்து கொள்ள முடியும்.

இதற்கு முன்னர் இந்த பணப் பரிவர்த்தனை வரம்பு 2 லட்சம் ரூபாய் ஆக இருந்தது என்பது குறிப்பித்தக்கது. டிஜிட்டல் முறை மூலமாக 5 லட்சம் ரூபாய் வரையில் பணப் பரிவர்த்தனைகள் செய்தால் கூடுதலாக எந்த ஒரு சேவைக் கட்டணமும் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படாது என்றும் எஸ்பிஐ அறிவித்து உள்ளது.

டிஜிட்டல் முறை என்பது இணைய வழி பேங்கிங், மொபைல் பேங்கிங், யோனோ சேவை என அனைத்தும் இதில் அடங்கும். வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகம் மேற்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிஐ கூறுகிறது.

ஆனால், ஆஃப்லைனில் 1,000 ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்தால் அதற்கு சேவை கட்டணங்கள் உடன் ஜிஎஸ்டி கட்டணமும் செலுத்த வேண்டியது இருக்கும். இந்த அனைத்துப் புதிய மாற்றங்களும் விதிமுறைகளும் வருகிற பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமல் ஆகும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

5 லட்சம் ரூபாய் வரையில் ஆன்லைன் வழியாகப் பரிவர்த்தனை செய்தால் சேவை கட்டணங்களும் கிடையாது, ஜிஎஸ்டி வரியும் கிடையாது. ஆஃப்லைன் வழியில் பணப் பரிவர்த்தனை செய்தால் 1,000 ரூபாய் வரையில் எந்த ஒரு கட்டணமும் கிடையாது. 2 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரையில் பரிவர்த்தனை செய்தால் 20 ரூபாய் சேவைக் கட்டணம் உடன் ஜிஎஸ்டி வரியும் செலுத்த வேண்டும்.

SBI, எஸ்பிஐ, பணப் பரிவர்த்தனை, ஏடிஎம், SBI CHARGES, SBI IMPS LIMIT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்