டிவிட்டர் புதிய சிஇஓ பரக் அகர்வால் 'சம்பளம்' எவ்வளவு...? இந்த மூன்று பேரில் யாருக்கு அதிகம்...?
முகப்பு > செய்திகள் > வணிகம்ட்விட்டரில் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இந்தியரான பரக் அகர்வாலின் சம்பளம் குறித்து தேடிய செய்தி சமூகவலைத்தளத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது.
சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்தியரான பரக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங்கான அகர்வால் அவரின் தலைமை செயல் அதிகாரி பணிக்காக எவ்வளவு ஊதியம் பெறுகிறார் என்பது அதிகமாக தேடப்பட்டுள்ளது.
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஒரு வருடத்திற்கான சம்பளத் தொகையாக $1.31 பில்லியன் டாலர் வாங்கி வருகிறார். இது இந்திய மதிப்பின்படி 9,745 கோடி ரூபாய் ஆகும். அடுத்தபடியாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா ஒரு வருடத்திற்கு $420 மில்லியன் டாலர் சம்பளமாக பெறுகிறார். இது இந்திய மதிப்பின்படி 3084 கோடி ரூபாய் ஆகும்.
இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அகர்வாலின் ஊதியம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனம் அவருக்கு அளித்துள்ள பணி ஆணையில் ஆண்டுக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் ஊதியம் என குறிப்பிட்டுள்ளது.
மேலும், பரக் அகர்வாலுக்கு ஊக்கத் தொகையாக அவரின் ஆண்டு வருமானத்தில் 150 சதவீதம் வழங்கப்படும் எனவும், கிராண்ட் டேட் ஃபேஸ் வேல்யூவின் கீழ் 12.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பங்குகள் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தவிர பிற அனைத்து சலுகைகளும் அவருக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரக் அகர்வால் இப்போது தான் ட்விட்டரில் இணைத்துள்ளதாக பல செய்திகள் வெளிவருகின்றனர். ஆனால், பரக் அகர்வால் சுமார் பத்து ஆண்டுகளாக ட்விட்டரில் பணியாற்றி வருகிறார். அவரின் உழைப்பிற்கு கிடைத்த சன்மானம் தான் இப்போதைய புதிய தலைமை செயல் அதிகாரி பதவி ஆகும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சுந்தர் பிச்சை டூ பரக் அக்ரவல்… சர்வதேச அளவில் அசத்தி வரும் டெக் உலகின் டாப் ‘இந்திய’ சிஇஓ-க்கள்..!
- 'அமெரிக்காவுக்கு இந்தியாவிலிருந்து எவ்ளோ நன்மைகள் பார்த்தீங்களா..!'- புகழ்ந்து தள்ளும் எலான் மஸ்க்
- ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சி பதவி விலக 3 காரணங்கள்… அதுல நம்ம பரக் அக்ரவலும் காரணம்.. பின்னணி..!
- டிவிட்டர் நிறுவனத்தின் புதிய ‘சிஇஓ’ ஆன இந்தியர்.. யார் இவர்..? வெளியான சுவாரஸ்ய தகவல்..!
- டிவிட்டர் சிஇஓ ‘திடீர்’ முடிவு..? அமெரிக்காவில் பரபரப்பு..!
- என்னடா பண்ணி வச்சிருக்கீங்க..!- ‘தக்காளி’யே புலம்பும் அளவுக்கு வச்சு செய்யும் மீம்ஸ் பாய்ஸ்..!
- 'ஹர்பஜனை சீண்டிய பாகிஸ்தான் வீரர்...' 'பழசு எல்லாத்தையும் கிளறி படுபயங்கரமாக மாறிய சண்டை...' - போர்க்களமான டிவிட்டர்...!
- VIDEO: 'வீடியோ' எடுக்குறத கவனிக்கல... அது தெரியாம மேடம் 'எக்ஸ்ப்ரஷன்'ல பின்றாங்க...! - இணையத்தை 'தெறிக்க' விட்ட வைரல் வீடியோ...!
- பாவம் அந்த மனுஷன், அவரே 'ஃபீல்' பண்ணிட்டு இருக்காரு...! இந்த நேரத்துல 'இப்படியா' பண்றது...? - ஃபேஸ்புக்கை சீண்டிய 'ட்விட்டர்' சிஇஓ...!
- 'ண்ணோவ், என்ன உட்ருணா'... 'நேத்து நடந்த சம்பவத்துக்கும் எனக்கும் சம்மந்தம் இல்ல'... 'ஒருபுறம் Customer Care'... மறுபக்கம் ட்விட்டரில் கதறவிட்ட நெட்டிசன்கள்!