ஒற்றை பெயரால் வந்த குழப்பம்.. 10 நிமிஷத்துல 2 லட்சம் கோடியை இழந்த பணக்காரர்... பாவம் மனுஷன்..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

சீனாவின் அலிபாபா நிறுவனத்தின் தலைவர் கைது செய்யப்பட்டதாக தவறுதலாக நினைத்து, அந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் எடுத்த விபரீத முடிவால் அந்நிறுவனத்திற்கு 2 லட்சம் கோடி வரையில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

Advertising
>
Advertising

அலிபாபா

அண்டை நாடான சீனாவை மையமாகக்கொண்டு இயங்கிவருகிறது அலிபாபா எனும் நிறுவனம். இதனை பிரபல பணக்காரரும் தொழிலதிபருமான ஜாக் மா கடந்த 1999 ஆம் ஆண்டு துவங்கினார். கிளவுட் கம்பியூட்டிங், ஆன்லைன் ஷாப்பிங் ஆகிய துறைகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டுவருகிறது. பிரபல இதழானஃபோர்ப்ஸ் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் ஜாக் மா-வின் சொத்துமதிப்பு 23.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இவர் உலகின் 62 பணக்காரராக அறியப்படுகிறார். சீன அரசு எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில் கடந்த இரண்டு வருடங்களாக பொதுவெளியில் முகம் காட்டாமல் இருந்துவரும் ஜாக் மா கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாக நினைத்து முதலீட்டாளர்கள் தங்களுடைய பங்குகளை விற்கவே, சீனாவின் பங்குச் சந்தையே அதிர்ந்து போனது.

சரிவு

பொது இடங்களுக்கு வருவதை தவிர்த்துவரும் ஜாக் மா, கடந்த செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தீயாய் பரவியிருக்கிறது. இதனால் அலிபாபா நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 1.97 லட்சம் கோடி) அளவுக்கு சரிவை சந்தித்தது.

ஜாக் மா கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தி வதந்திதான் என்பது தற்போது தெரியவந்திருக்கிறது. இதனால் அந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

குழப்பம்

சீனாவின் ஹாங்சோ மாகாணத்தில் தான் அலிபாபா நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில், "மா யுன்" என்பவரை காவல்துறை அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்திருக்கின்றனர். அவரும் ஹாங்சோ மாகாணத்தை சேர்ந்தவர். இந்நிலையில், ஜாக் மா தான் கைதுசெய்யப்பட்டுவிட்டார் என வதந்திகள் காட்டுத்தீ போல பரவியிருக்கின்றன.

இதன் காரணமாகவே, முதலீட்டாளர்கள் அந்த நிறுவனத்தில் இருந்த தங்களது பங்குகளை விற்றுள்ளனர். இதனால் அந்நிறுவனத்தின் பங்குகள் சில நிமிடங்களிலேயே 9.4 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி கண்டன. இதன்மூலம், அலிபாபா நிறுவனத்திற்கு 26 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட்டதாக கணிக்கப்பட்டுள்ளது.

பிரபல தொழிலதிபரான ஜாக் மா கைது செய்யப்பட்டதாக வதந்தி பரவியதால் அலிபாபா நிறுவனத்திற்கு 2 லட்சம் கோடி வரையில் இழப்பு ஏற்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/

 

JACKMA, ALIBABA, CHINA, சீனா, அலிபாபா, ஜாக்மா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்