உங்க எல்லாருக்கும் நிரந்தரமா 'work from home' தான்,,.. 'இந்தியாவில்' முதல் முறையாக அறிவித்த முன்னணி 'நிறுவனம்'!!!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கொரோனா ஊரடங்கு காலகட்டங்களில் உலகின் பல முன்னணி நிறுவனங்கள் நிதி நெருக்கடி காரணமாக தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.

உங்க எல்லாருக்கும் நிரந்தரமா 'work from home' தான்,,.. 'இந்தியாவில்' முதல் முறையாக அறிவித்த முன்னணி 'நிறுவனம்'!!!

மேலும் சில நிறுவனங்கள், ஊழியர்கள் கூட்டாக உட்கார்ந்து அலுவலகத்தில் பணிபுரிய முடியாது என்பதால், வீட்டிலிருந்தே பணிபுரிய (work from home) அறிவுறுத்தி வருகின்றது. இந்நிலையில், இந்தியாவில் முதல் முறையாக ஆர்.பி.ஜி எண்டர்ப்ரைசஸ் (RPG Enterprises), இன்று முதல் தங்களது சேல்ஸ் ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணிகளை மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

தங்களது விற்பனை ஊழியர்கள், தொலை தூரத்தில் இருந்தே பணிபுரிய வேண்டி தங்களின் பணிக் கொள்கைகளை மாற்றியமைத்துள்ளது. மீதமுள்ள ஊழியர்கள் 50 சதவீதம் பணிகளை வீட்டிலிருந்தபடியே மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. முன்னதாக, பல ஐ.டி நிறுவனங்கள் தங்களின் 20 முதல் 50 சதவீத ஊழியர்கள் வரை வீட்டிலிருந்தே பணிபுரிந்து கொள்ளலாம் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்