'அமேசான் வரி மோசடி சர்ச்சை'... 'அடிபடும் இஃன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் பெயர்'... என்னதான் பிரச்சனை?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

பிரிட்டன் அமைச்சர்களிலேயே மிகவும் செல்வந்தராக ரிஷிசுனக் இருப்பதாக கார்டியன் சுட்டிக்காட்டியுள்ளது.

அமேசான் இந்தியா நிறுவனத்தில் பெரும்பான்மையான பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமாக விளங்கும் Cloudtail India 56 கோடி ரூபாய் வரி மோசடியில் ஈடுபட்டிருப்பதாக தி கார்டியன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி தான் தற்போது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இன்ஃபோசிஸ் துணை நிறுவனர் நாராயண மூர்த்திக்கும் அமேசான் நிறுவனத்துக்கும் இடையேயான கூட்டு ஒப்பந்த திட்டத்தின் அங்கமாக இருப்பது Cloudtail நிறுவனம். 2019ம் ஆண்டு இ-காமர்ஸ் தொழில்களின் அந்நிய நேரடி முதலீட்டில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம் காரணமாக அமேசான் நிறுவனம் தன்னுடைய பங்கைக் குறைத்துக் கொண்டு அதற்குப் பதிலாக Cloudtail நிறுவனத்தின் பங்குகளை அதிகரித்தது.

Cloudtail நிறுவனத்தில் நாராயண மூர்த்தியின் Catamaran வெஞ்சர்ஸ் நிதி நிறுவனத்திற்கு 76% பங்குகள் இருப்பதாகவும், 24% பங்குகள் அமேசானிடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் கிளவுட் டெயில் நிறுவனத்திலும் அமேசானின் முன்னாள் ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாக ‘தி கார்டியன்’ தெரிவித்துள்ளது. இருப்பினும் கடந்த 4 ஆண்டுகளாக மிகவும் சொற்ப அளவிலான வரியை மட்டுமே இந்த நிறுவனம் செலுத்திவந்ததாகவும் அதன் காரணமாக வரித்துறையினர் Cloudtail நிறுவனம் 56 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படுத்தியிருப்பதாகக்  தகவல்கள் வெளியாகி உள்ளன.

இருப்பினும் இந்த விவகாரம் குறித்து வரித்துறையினரிடம் மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேற்கண்ட குற்றச்சாட்டு இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை மீறுவதாக இருக்கலாம் என கார்டியன் தெரிவித்துள்ளது. இதற்கிடையே பிரிட்டன் அமைச்சர்களிலேயே மிகவும் செல்வந்தராக ரிஷிசுனக் இருப்பதாக கார்டியன் சுட்டிக்காட்டியுள்ளது.

அதே போல ரிஷி சுனக்கின் மனைவியும், நாராயண மூர்த்தியின் மகளுமான அக்‌ஷதாவின் சொத்து மதிப்பு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் சொத்து மதிப்பைக்காட்டிலும் கூடுதல் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மற்ற செய்திகள்