"நான் ரத்தன் டாடா பேசுறேன்" ..இளம் தொழிலதிபரின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட ஒரு போன்கால்.. என்ன மனுஷன்யா..!
முகப்பு > செய்திகள் > வணிகம்ரெபோஸ் எனெர்ஜி நிறுவனத்தின் தலைவர் அதிதி போசலே வாலுஞ், தனது நிறுவனத்துக்கு ரத்தன் டாடா செய்த உதவி குறித்து மனம் திறந்திருக்கிறார். இது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
ரெபோஸ் எனெர்ஜி
மகாராஷ்டிராவின் புனேவை மையமாகக்கொண்டு இயங்கிவரும் நிறுவனம் ரெபோஸ் எனெர்ஜி. இந்நிறுவனம் டீசலை டோர் டெலிவரி செய்துவருகிறது. இதன்மூலம் நாட்டின் மொத்த எரிபொருள் பயன்பாட்டை குறைக்க முடியும் என்கிறார் அதிதி. சில வருடங்களுக்கு முன்னர் நிறுவனம் துவங்கப்பட்ட போது அதிதி மற்றும் அவரது கணவர் சேத்தன் வாலுஞ்ச் ஆகிய இருவரும் யாரிடமாவது தொழில் குறித்த ஆலோசனை பெற நினைத்திருக்கிறார்கள். அப்போது இருவருக்கும் மனதில் தோன்றிய முதல் பெயர் ரத்தன் டாடா தான்.
இதுபற்றி தனது கணவரிடம் அதிதி சொல்லியிருக்கிறார். அதற்கு,"டாடா நம் அண்டை வீட்டில் வசிக்கவில்லை. அவரை சந்திப்பது மிகவும் கடினமான காரியம்" எனச் சொல்லியிருக்கிறார். ஆனால், அதிதி தனது முயற்சியை கைவிடவில்லை. இதுபற்றி பேசிய அதிதி,"நாங்கள் இருவரும் முறையான வணிகக் கல்வியைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் எங்கள் வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டோம். எதற்கும் சாக்குப்போக்கு சொல்வது தோல்வியின் வீட்டைக் கட்டும் அடித்தளமாகும். உங்களால் டாடாவை சந்திக்க முடியாது என பலர் கூறினர். ஆனால் நான் பின்வாங்கவில்லை" என்றார்.
நான் ரத்தன் டாடா பேசுகிறேன்
இறுதியாக, தங்களது நிறுவனம் எப்படி இயங்கும் என்பதை விளக்கும் முப்பரிமாண திட்டத்தை டாடாவிடம் அளிக்க இருவரும் முயற்சித்திருக்கிறார்கள். மேலும், கைப்பட எழுதிய கடிதங்களையும் இணைத்து டாடாவிற்கு நெருக்கமானவர் மூலமாக அதனை அனுப்பியுள்ளனர். அதன்பிறகு சுமார் 12 மணிநேரம் டாடாவின் வீட்டுக்கு வெளியே காத்திருந்திருக்கிறார் அதிதி. இறுதியாக அவர் ஹோட்டலுக்கு திரும்பிய போது , அவருக்கு போன் கால் வந்திருக்கிறது. அதில்,"நான் அதிதியிடம் பேசலாமா?" என குரல் கேட்டதும் சந்தேகமடைந்த அதிதி, யார்? எனக் கேட்டிருக்கிறார்.
எதிர்முனையில் இருந்தவர்,"நான் ரத்தன் டாடா பேசுகிறேன். உங்களது கடிதம் கிடைத்தது. நாளை சந்திக்கலாமா?" எனக் கூறியதும் தான் துள்ளி குதித்ததாக கூறியுள்ளார் அதிதி. அதை தொடர்ந்து அடுத்தநாள் டாடாவை அதிதி மற்றும் கணவர் சேத்தன் ஆகியோர் சந்தித்துள்ளனர். மூன்று மணிநேரம் நீடித்த இந்த சந்திப்பில் டாடா பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டதாகவும் இன்று தனது நிறுவனம் இயங்குவதற்கு டாடா அளித்த வழிகாட்டுதல்களே காரணம் எனவும் அதிதி குறிப்பிட்டிருக்கிறார். இதனிடையே ரெபோஸ் நிறுவனத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதலீடு செய்ய முன்வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அதிதியின் இந்த பதிவு சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ரத்தன் டாடாவிற்கு கிடைத்த எலக்ட்ரிக் கார்.. வைரலாகும் புகைப்படம்.. அப்படி என்ன ஸ்பெஷல்?
- ரத்தன் டாடாவுடன் ஆபீஸ் மீட்டிங் போகும் தெருநாய்.. அவரு சொன்ன வார்த்தைய கேட்டு 40 நிமிஷம் அப்படியே இருந்துச்சு.. வெளிவந்துள்ள சுவாரஸ்ய தகவல்
- யார் அந்த பையன்? நான் அவர பார்க்கணும்.. ரத்தன் டாடாவை நெகிழ வைத்த காரியம்.. நல்ல மனசால பெரிய இடத்துக்கு போன இளைஞர்!
- யாருப்பா இவரு? இந்த வயசுலையே ரத்தன் டாடாவோட நெருங்கிய நண்பராக எப்படி வாய்ப்பு கிடைச்சுது?
- 'தாத்தா பாருங்க'... 'இந்த ட்வீட் போட எத்தனை நாள் காத்திருந்தேன்'... 'டாடாவின் கைக்கு போன ஏர் இந்தியா'... 'கோடிக்கணக்கில் போன ஏலம்'... வெளியான தகவல்!
- "Hats off ஸார்... உண்மையாவே நீங்க வேற லெவல் தான்..." 'ரத்தன் டாடா' செய்த செயல்... பாராட்டித் தள்ளும் 'நெட்டிசன்கள்'!!!
- 'இந்த காலேஜ் பசங்கள வேலைக்கு சேர்க்க கூடாது'... 'ரத்தன் டாடா அப்படி சொன்னாரா'?... வைரலாகும் ட்வீட்!