ஸ்மார்ட்போன் விலையில் லேப்டாப்.. ஜியோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு வசதிகளா..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக தங்களது லேப்டாப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

Advertising
>
Advertising

ஜியோ நிறுவனம்

இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான முகேஷ் அம்பானி கடந்த 2016 ஆம் ஆண்டு ஜியோ தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தை துவங்கினார். குறைந்த கட்டணத்தில் இணைய சேவை வழங்கியதன் பலனாக கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் ஈர்த்தது. தொடர்ந்து பல வர்த்தக நடவடிக்கைகளையும் ஜியோ மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ஜியோ நிறுவனம் பட்ஜெட் விலையில் ஜியோபுக் எனப்படும் லேப்டாப்பை சந்தையில் களமிறங்கியுள்ளது. முதல் படியாக அரசு துறைகள் மட்டுமே வாங்கும் வகையில் Government e-Marketplace-ல் இந்த லேப்டாப் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்த லேப்டாப் தீபாவளிக்கு பொதுமக்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜியோபுக் ஏற்கனவே இந்தியா மொபைல் காங்கிரஸ் (IMC), 2022 இன் 6வது பதிப்பில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஜியோபுக்

இந்த லேப்டாப்பில் Qualcomm Snapdragon 665 octa-core செயலி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இது ஜியோ நிறுவனத்தின் சொந்த ஆப்பரேட்டிங் சிஸ்டமான JioOS -ல் இயங்குகிறது. RAM-ஐ பொறுத்தவரையில் 2GB LPDDR4X -ம் லேப்டாப்பின் ஸ்டோரேஜ் 32GB ஆகவும் இருக்கிறது. 11.6-inch HD LED டிஸ்பிளேவுடன் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த லேப்டாப்பில் USB 2.0, USB 3.0 மற்றும் HDMI என 3 போர்ட்கள் இடம் பெற்றிருக்கின்றன.

8 மணி நேரம் தாங்கக்கூடிய 55.1-60Ah பேட்டரி இதில் இருக்கிறது. 1.2 கிலோகிராம் எடையுடன் வெளிவந்திருக்கும் இந்த லேப்டாப்பின் விலை 19,500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. USB Type-C போர்ட் கொடுக்கப்படவில்லை. மாறாக  microSD ஸ்லாட் இடம்பெற்றிருக்கிறது. Wi-Fi, ப்ளூடூத் வசதிகளும் இதில் இருக்கின்றன. அதேபோல. 4G பிராட்பேண்ட் கனெக்ஷன் வசதியும் இதில் இருக்கிறது. fingerprint scanner வசதி இந்த லேப்டாப்பில் கிடையாது. தற்போது அரசு துறைகளுக்கு மட்டும் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த லேப்டாப்பிற்கு 1 வருடம் வாரண்டி வழங்கப்படுகிறது.

JIOBOOK, LAPTOP, AMBANI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்