மகனுக்காக துபாயில் அம்பானி வாங்கிய சொகுசு வில்லா?.. ஆத்தாடி விலையை கேட்டு திகைச்சுப்போன நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

உலக பணக்காரர்களில் ஒருவரும் இந்திய தொழிலதிபருமான முகேஷ் அம்பானி துபாயில் உள்ள சொகுசு வில்லா ஒன்றை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ஒரே நேரத்துல 2 காதலிகள் கிட்டயும் வசமா சிக்குன வாலிபர்.. பரபரப்பான பஸ் ஸ்டாண்ட்.. இவ்வளவு பிரச்சனைல இந்த மனுஷன் செஞ்ச காரியம் இருக்கே..!

முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராக இருக்கிறார் முகேஷ் அம்பானி. உலக பணக்காரர்களின் வரிசையில் 11 வது இடத்தில் இருக்கும் அம்பானி சமீபத்தில் தனது நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளை தனது மகன் மற்றும் மகளுக்கு அளித்திருந்தார். இதனை தொடர்ந்து, ஆகாஷ் அம்பானிக்கு ஜியோ குழுமத்தின் சேர்மேன் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் துபாயில் சொகுசு வில்லா ஒன்றை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

துபாய் வில்லா

துபாயில் வெளிநாட்டு மக்கள் குடியேறுவதை அதிகரிக்கும் நோக்கில் பல திட்டங்களை துபாய் அரசு மேற்கொண்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்னர் துபாயின் ஆட்சியாளரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை தலைவருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் கோல்டன் விசாவை அறிமுகப்படுத்தினார் இதன்மூலம் உலகளவில் தொழிலதிபர்கள், கலை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதேபோல, துபாயில் உள்ள சொகுசு வில்லாக்களை வெளிநாட்டினருக்கு விற்கவும் ஆர்வம்காட்டி வந்தது துபாய் அரசு. அந்தவகையில் துபாயின் பாம் ஜூமெய்ராவில் உள்ள சொகுசு வில்லா ஒன்றை முகேஷ் அம்பானி வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக 80 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 640 கோடி ரூபாய்) செலவழிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

மகனுக்காக

இந்த விலையுயர்ந்த வில்லாவை முகேஷ் அம்பானி தனது மகன் ஆனந்திற்காக வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஸ்டாக் பூங்காவை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. இதன் மதிப்பு 79 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்த பூங்காவின் உள்ளே ஜார்ஜியா காலத்து மாளிகை ஒன்று இருக்கிறது. இது அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்காக வாங்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், துபாயின் பாம் ஜூமெய்ராவில் உள்ள சொகுசு வில்லா ஒன்றை அம்பானி தனது மகன் ஆனந்திற்கு வாங்கியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருப்பது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | நடிகை மரண வழக்கில் ஏற்பட்ட அடுத்த திருப்பம்.. 25 பேர்கிட்ட நடந்த தொடர் விசாரணை.. போலீசார் சொன்ன தகவல்..!

MUKESH AMBANI, RELIANCE INDUSTRIES, DUBAI, BUY EXPENSIVE HOME, VILLA, DUBAI VILLA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்