‘ஜியோவ காப்பத்தனும்’... ‘புதிய டிஜிட்டல் சேவை’... 'ரிலையன்ஸ் எடுத்துள்ள அதிரடி முடிவு'!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

ஜியோவை கடன் இல்லாத நிறுவனமாக மாற்ற, புதிய டிஜிட்டல் நிறுவனத்தை தொடங்க, ரிலையன்ஸ் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் முழு பங்குகளும், தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வசம் உள்ளது. இந்நிலையில், ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தை, ஸ்பெக்ட்ரம் தொடர்பான கடன்களைத் தவிர, வரும் மார்ச் 31, 2020-க்குள் கடன் இல்லாத நிறுவனமாக மாற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, புதிய துணை டிஜிட்டல் நிறுவனம் ஒன்றை, 1,08,000 கோடி ரூபாய் முதலீட்டில் ரிலையன்ஸ் தொடங்க உள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்படும் டிஜிட்டல் நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் முழுமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரிலையன்ஸ் வசமுள்ள ஜியோவின் பங்குகள் புதிதாக தொடங்கப்பட உள்ள நிறுவனத்துக்கு மாற்றப்பட உள்ளது.

இதகுறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறுகையில், ‘புதிதாக தொடங்கப்பட உள்ள துணை நிறுவனம், டிஜிட்டல் துறையில் உண்மையிலேயே மாற்றங்களைக் கொண்டு வரும். அதனுடன் புதிய சேவைகளைக் கொடுக்கும் தளமாகவும் இருக்கும். எங்கள் டிஜிட்டல் சூழல் அமைப்பின் வளர்ச்சியையும், அதன் அளவையும் கருத்தில் கொண்டு, பலரும் எங்களோடு இணைந்து வேலை பார்க்க விருப்பம் தெரிவித்து உள்ளனர்’ என்று கூறியுள்ளார்.

JIO, DIGITAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்