வட்டி விகிதங்கள் அதிகரிக்கலாம்? ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கடந்த சில வருடங்களாக ஒரே வட்டி விகிதத்தை கடைபிடித்து வந்த நிலையில் தற்போது அதில் ஏதும் மாற்றம் இருக்குமா, இல்லையா என்ற கோணத்தில் ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertising
>
Advertising

மும்பையில் ரிசர்வ் வங்கியின் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்று கூறப்படும் விகிதமானது, வங்கிகளிடமிருந்து பெரும் கடன் விகிதத்தை 3.35 சதவிகிதத்திலிருந்து 3.55 சதவிகிதமாக உயர்த்த இருக்கிறதா என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என அறிவிப்பு

ரிசர்வ் வங்கி நிதி கொள்கையானது, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது  இந்த நிலையில் 2020ம் ஆண்டு மே 22 ஆம் தேதியில் வட்டி விகிதம் சட்டென்று குறைக்கப்பட்டது. அதன்பின் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தில் 8 முறையாக  எந்தவித மாற்றமும் ரிசர்வ் வங்கி செய்யவில்லை. மேலும், நிதிக்கொள்கை குறித்த முடிவு எடுக்கும் ஆறு பேர் கொண்ட நிதிக்கொள்கை குழு, இதுகுறித்து மும்பையில் விவாதித்து வந்த நிலையில், இக்கூட்டத்திற்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கடைசியாக நிதிக் கொள்கை முடிவு,

பின்னர், கூட்டம் நிறைவடைந்த பின் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கடைசியாக கடந்த டிசம்பர் மாதம் நிதிக் கொள்கை முடிவு எடுப்பது குறித்த ஆறு பேர் கொண்ட கூட்டத்துக்குப் பின்பும் வட்டி விகிதங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. குறுகிய கால கடன் வட்டி விகிதம் 4 சதவீதமாக நீடிக்கும் நிலையில் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35 சதவீதமாக நீடிக்கிறது.

மாற்றமின்றி ஒன்பதாவது முறை

இதனைத்தொடர்ந்து, தொடர்ச்சியாக வட்டி விகிதங்களில் மாற்றமின்றி ஒன்பதாவது முறையாக தொடக்க நிலையில், ரொக்க கையிருப்பு விகிதம் (சிஆர்ஆர்) 4 சதவீதத்திலும், எஸ்எல்ஆர் 18 சதவீதத்திலும் உள்ளது. மேலும், மும்பையில் ரிசர்வ் வங்கியின் ஆய்வு கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்த நிலையில், புகழ் பெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் இன்று துக்கம் அனுசரிப்பு அறிவித்ததை அடுத்து ரிசர்வ் வங்கி நிதி கொள்கை குறித்த குழுவின் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வருகின்ற பத்தாம் தேதி முடிவு

மேலும், வருகின்ற பத்தாம் தேதி இந்த கூட்டம் முடிவடையும் நிலையில், அன்று தனது முடிவை குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொருளாதார வல்லுனர்கள் ரிசர்வ் வங்கி ரிவர்ஸ் ரெப்போ விகிதம் என அழைக்கப்படும், வங்கிகளிடமிருந்து கடன் பெறும் விகிதத்தை 3.35 சதவீதத்தில் இருந்து 3.55 சதவீதமாக உயர்த்தும் எனக் கணிக்கின்றனர்.

யார் கணிப்பு சரி

அதேவேளையில், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை சீராக வைத்திருக்கும் என சிலர் தெரிவிக்கும் நிலையில், இந்த கொரோனா பெரும் தொற்று முழுமையாக குறையாது இருப்பதால், எந்தவித மாற்றமும் இருக்காது என சிலர் தெரிவிக்க, அதற்கு மாற்றாக சிலர் நோய்த் தொற்றுக்கு முன்னதாக அதிகரித்த உபரி பண புழக்கத்தை குறைப்பதற்கான வழிமுறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் கூடுதல் இருக்குமென பல பொருளாதார வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் சிலர் ஏப்ரலில் நடக்கும் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 25 பிபிஎஸ் கூடுமென தெரிவிக்கிறார்கள்.

RBI, BANK, MUMBAI, INTEREST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்