'கிரெடிட் கார்டு Auto Debit'ல் காசு எடுக்குறாங்களா'?... 'ரிசர்வ் பேங்க் கொண்டு வரும் அதிரடி மாற்றங்கள்'... என்னென்ன கட்டுப்பாடுகள்?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டுகள் மூலமான ஆட்டோ டெபிட் முறையில் ரிசர்வ் வங்கி பல மாற்றங்களை அறிவித்துள்ளது.

'கிரெடிட் கார்டு Auto Debit'ல் காசு எடுக்குறாங்களா'?... 'ரிசர்வ் பேங்க் கொண்டு வரும் அதிரடி மாற்றங்கள்'... என்னென்ன கட்டுப்பாடுகள்?

தற்போதைய இணைய உலகத்தில் பெரும்பாலும் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் நாம் பல்வேறு விதமான பரிவர்த்தனைகளை மேற்கொள்வோம். உதாரணமாக ஓடிடி, டிஷ் டிவி, டெலிபோன் என மாதாந்திர கட்டணம் செலுத்துவது என பலவும் இதில் அடக்கம்.

ஒருவேளை பணம் செலுத்தாமல் விட்டுவிட்டால் அந்த சேவை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அதனால், ஆட்டோ டெபிட் மூலமாக தாமாக டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்ட் மூலமாகப் பணம் எடுப்பதற்கு நாம் அனுமதி கொடுத்திருப்போம். அதே நேரத்தில் இதில் பல்வேறு மோசடி வேலைகள் நடப்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன.

RBI extends timeline for implementation of Auto-debit payments

நமது கணக்கை பேங்கிங் செய்து அதிலிருந்து பணம் எடுப்பது, குறிப்பிட்ட தவணைக்கு நமது அனுமதி இல்லாமலேயே நிறுவனங்கள் பணத்தை எடுத்துக் கொள்வது போன்றவை நடக்கின்றன. இதைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய ரிசர்வ் வங்கி புதிய நடைமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. இது நாளை முதல் அமலுக்கு வரும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் செப்டம்பர் 30ம் தேதி முதல் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. புதிய விதிகள் படி வங்கிகள் வாடிக்கையாளரின் பணத்தைத் தானியங்கி முறையில்(Auto Debit) மாற்றம் செய்வதாக இருந்தால் 24 மணி நேரத்துக்கு முன்பு வாடிக்கையாளருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர் அனுமதி கொடுத்த பிறகே பணப்பரிமாற்றம் நடக்க வேண்டும்.

தானியங்கி முறையில் டெபிட் பணப் பரிமாற்றம் செய்வது, தவணை தொகை செலுத்துவது போன்றவற்றை அனுமதி பெற்றே மாற்ற வேண்டும். மேலும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளின் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பது தொடர்பாக நிரந்தர அறிவிப்புகளை வழங்க வேண்டும். ரூ. 5 ஆயிரத்துக்குத் தானியங்கி டெபிட் பணப்பரிமாற்றம் செய்வதாக இருந்தால் வாடிக்கையாளருக்கு ஓ.டி.பி. (OTP) அனுப்ப வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் மூலம் ஆன்லைன் மோசடிகள் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்