‘பொதுமக்களின் நலனுக்காக’... ‘நாளை முதல் வங்கிகள்’... 'ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு'!
முகப்பு > செய்திகள் > வணிகம்பொது மக்கள் வங்கிக்கு சென்று பணம் பெற வேண்டிய அவசியம் உள்ளதால் அனைத்து வங்கிகளும் நாளை முதல் முழுமையாக செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணத்தினால், அனைத்து வங்கிகளும் நாளையில் இருந்து (2-ந்தேதி), காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாசலம் கூறியதாவது:-
‘கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க வங்கி சேவை ஒருவாரம் குறைக்கப்பட்டு இருந்தது. நாளை முதல் மீண்டும் வழக்கமான சேவைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி உதவிகளை வங்கிகள் மூலமாக வழங்கி வருகிறார்.
அந்த நிதிகளை வழங்குவதற்கு வங்கிகள் முழுமையாக செயல்பட்டு ஆக வேண்டும். இன்று வங்கி ஊழியர்கள் பணிக்கு வந்த போதிலும் வாடிக்கையாளர்களுக்கான சேவை கிடையாது. வங்கி கணக்குகள் இன்று முடிக்கப்படுகின்றன. நாளை முதல் முழுமையாக வங்கிகள் செயல்படும்’ இவ்வாறு அவர் கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மதுரையில் 2 கிராமங்களுக்கு முற்றிலும் 'சீல்' வைத்து... சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை!... கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்!
- ‘இவங்கள வச்சு மட்டும் ஐபிஎல் நடத்தலாமே’!.. ராஜஸ்தான் ராயல்ஸ் சிஇஓ சொன்ன புது யோசனை..! என்ன தெரியுமா..?
- ‘ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா உறுதி’... ‘இவர்கள் அனைவரும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்’... ‘பாதிப்பு எண்ணிக்கை 234 ஆக உயர்வு’... ‘தமிழக சுகாதாரத் துறை செயலாளர் தகவல்’!
- 'விழித்திருப்போம்; விலகியிருப்போம்' 'வீட்டிலேயே இருப்போம்' 'முதல்வரின் ட்விட்டர்' பதிவுகளுடன் 'இணைந்திருப்போம்'...
- ‘அத பாத்ததும் மனசு ரொம்ப கஷ்டமாகிடுச்சு’.. ‘அவங்க திரும்ப வர வரைக்கும் நான் இத செய்யப்போறேன்’.. நெகிழவைத்த சம்பவம்..!
- 'கொரோனா தடுப்பு பணிகளுக்காக... ரூ.1,125 கோடி வழங்கும் பிரபல இந்திய ஐ.டி நிறுவனம்!
- '144 தடை'...'சென்னையில் மட்டும் ஊரடங்கு நீட்டிப்பு'... சென்னை காவல்துறை புதிய அறிவிப்பு!
- 'அசால்ட்டாக கை கொடுத்த புதின்'... 'கொஞ்ச நேரத்துல டாக்டருக்கு நடந்த சோகம்'... ரஷியாவில் பரபரப்பு!
- "இதுபோன்ற ஒரு நெருக்கடியை சந்தித்து இல்லை..." 'உலகப் போருடன்' ஒப்பிட்ட 'ஐ.நா. பொதுச் செயலர்'... 'நாடுகள்' ஒன்றிணைய 'வேண்டுகோள்'...
- ‘டெல்லி மாநாட்டை அட்டென்ட் பண்ணிட்டு.. அசால்டாக மருத்துவம் பார்த்துவந்த தமிழ்நாடு டாக்டர்!’.. கொரோனா பரிசோதனைக்காக அழைத்துச் சென்ற சுகாதாரத்துறை!