"ஒருநாள் Road-ல அவங்களை பார்த்தேன், அப்போதான் நானோ காரை தயாரிக்கணும்னு முடிவு செஞ்சேன்".. தொழிலதிபர் ரத்தன் டாடா சொன்ன சீக்ரட்..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, நானோ கார் தயாரிப்பு குறித்து முடிவெடுக்கப்பட்ட தருணம் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

ரத்தன் டாடா

1937 ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்த ரத்தன் டாடா, தனது ஈகை குணத்திற்காகவும் சாதுரியமான நிர்வாக முடிவுகளுக்கும் பெயர்போனவர். டாடா சன்ஸ் மற்றும் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாடா நானோ கார் தயாரிக்க தனக்கு உத்வேகம் அளித்தது எது? என்பது குறித்துப் பதிவிட்டு உள்ளார்..

கடந்த 2008 ஆம் ஆண்டு டாடா நிறுவனம் நானா காரை சந்தையில் களமிறங்கியது. ஒரு லட்ச ரூபாயில் கார் என்ற ரத்தன் டாடாவின் அறிவிப்பு வெளிவந்த நேரத்தில் மக்கள் அதனை நம்ப முடியாமல் இருந்தனர். ஆனால், சொன்னபடியே 1 லட்ச ரூபாய்க்கு நானோ காரை தயாரித்து வெளியிட்டார் டாடா. உலகின் மிகவும் விலை மலிவான கார் என்ற பெருமையும் நானோவுக்கு உண்டு.

இதுதான் காரணம்

நானோ கார் வெளிவந்து 14 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாடா,"இந்திய சாலைகளில் ஸ்கூட்டரில் மக்கள் செல்வதை பார்த்திருக்கிறேன். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் தாய் தந்தைக்கு நடுவே சாண்ட்விச் போல சின்னஞ்சிறிய குழந்தைகள் பயணிப்பதை கண்டிருக்கிறேன். அப்போதுதான் மலிவான விலையில் ஒரு காரை தயாரிக்கவேண்டும் என முடிவெடுத்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில்," முதலில் நாங்கள் இரு சக்கர வாகனங்களை எவ்வாறு பாதுகாப்பானதாக மாற்றுவது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சித்தோம். ஆனால் அது ஒரு காராக இருக்க வேண்டும் என்று நான் இறுதியாக முடிவு செய்தேன். நானோ, எப்பொழுதும் நம் மக்கள் அனைவருக்கும் பயன்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ரத்தன் டாடாவின் இந்த பதிவு, தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தப் பதிவினை 10  லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

 

 

TATA, RATANTATA, TATANANO, ரத்தன்டாடா, நானோகார்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்