கூகுள்... ஆப்பிள்... நெட்பிளிக்ஸ் நிறுவனங்களில் வேலைக்கு சேர்வது எப்படி?.. வெளியான அதிர்ச்சி தகவல்!.. வாயடைத்துப் போன பட்டதாரிகள்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

ஆப்பிள், கூகுள், நெட்பிளிக்ஸ், சீமென்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களில் பணி செய்வதற்கு கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு அவசியமில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. இது தொழில்துறையின் விதிமுறையாகவே விரைவில் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

கூகுள்... ஆப்பிள்... நெட்பிளிக்ஸ் நிறுவனங்களில் வேலைக்கு சேர்வது எப்படி?.. வெளியான அதிர்ச்சி தகவல்!.. வாயடைத்துப் போன பட்டதாரிகள்!

அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தில் கடந்த ஆண்டு பணியமர்த்தப்பட்ட 50 சதவீதம் பேர், 4 ஆண்டு கல்லூரி பட்டப்படிப்பு தகுதி இல்லாதவர்களே என்று அதன் சிஇஒ டிம்குக் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

வேலை செய்வதற்கு தேவையான திறனை பெரும்பாலான கல்லூரிகள் கற்றுத் தருவதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

qualification for jobs in gooogle apple netflix research by linkedin

எலக்ட்ரானிக் டெக்னீசியன், மெக்கானிக்கல் டிசைனர், மார்கெட்டிங் பிரதிநிதிகள் போன்ற வேலைகளில் பட்டதாரி அல்லாதவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது லிங்க்டுஇன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்