இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல இ-காமர்ஸ் நிறுவனம்.. வெளிவந்த அதிர்ச்சிகரமான அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான Shopee, இந்தியாவில் தனது சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல இ-காமர்ஸ் நிறுவனம்.. வெளிவந்த அதிர்ச்சிகரமான அறிவிப்பு..!
Advertising
>
Advertising

போடு சக்க.. குறைஞ்ச விலையில் டாப்லெட்.. Xiaomi நிறுவனத்தின் வேறமாரி அறிவிப்பு..!

இணைய பயன்பாட்டின் அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக பூமியின் மற்றொரு முனையில் இருப்பவர்களுடன் நம்மால் கணநேரத்தில் பேச முடிகிறது. அதே போல நம்முடைய வீட்டில் இருந்தபடியே நமக்குத் தேவையான பொருட்களையும் எளிதில் வாங்க முடிகிறது. இதற்கு அடிப்படையான இ-காமர்ஸ் எனப்படும் இணையவழி வர்த்தக சேவையை உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அதில் ஒன்றுதான் Shopee நிறுவனம்.

Popular e-commerce platform Shopee shuts operations in India

Shopee

சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் இந்நிறுவனம் இந்தியாவில் தனது இ-காமர்ஸ் சேவையை நிறுத்திக் கொள்வதாக தற்போது அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய தகவலை தகவலில்," Shopee இந்தியா நிறுவனம் மார்ச் 29 ஆம் தேதி 12 AM மணியுடன் மூடப்படுகிறது. இந்த தேதிக்கு முன்பாக ஆர்டர் செய்தவர்கள் தங்களுடைய பொருட்களை நிச்சயமாக பெற்றுக் கொள்ளலாம். இந்தியாவில் சேவை நிறுத்தப்பட்டாலும் After Sale சேவைகள் மற்றும் சப்போர்ட் ஆகியவை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். உங்களுடைய ஆதரவிற்கு நன்றி. உங்களுக்கு சேவை அளித்ததில் மகிழ்ச்சி அடைகிறோம்" என குறிப்பிட்டுள்ளது.

என்ன காரணம்?

இந்தியாவில் தங்களது சேவையை நிறுத்திக் கொள்வதாக Shopee நிறுவனம் தெரிவித்ததை தொடர்ந்து அந்த நிறுவனத்தின் அப்ளிகேஷன் கூகுள் பிளே ஸ்டார் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து அளித்த பேட்டியில்,"உலக வர்த்தக சந்தையில் ஸ்திரத்தன்மை இல்லாத காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

மறுப்பு

முன்னதாக சிங்கப்பூரைச் சேர்ந்த ஃபிரீ ஃபையர் என்னும் அப்ளிகேஷனுக்கு இந்திய அரசு தடை விதித்தது. கரீனா நிறுவனம் ஃப்ரீ பையர் அப்ளிகேஷனை வெளியிட்டது. இந்த கரீனா மற்றும் Shopee நிறுவனங்கள் 'Sea லிமிடட்' என்னும் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருபவை. இதனால்  ஃபிரீ ஃபையர் அப்ளிகேஷன் இந்தியாவில் முடக்கப்பட்டதை அடுத்து Shopee தளத்தையும் இந்நிறுவனம் மூடுவதாக தகவல் வெளியானது. இதனை அந்த நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

 இந்தியாவில் இயங்கி வந்த Shopee நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்திருப்பது, அதன் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரசவத்தின்போது கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்.. மருத்துவமனை வளாகத்திலேயே டாக்டர் எடுத்த விபரீத முடிவு..!

E COMMERCE, E COMMERCE PLATFORM, SHOPEE, INDIA, இ-காமர்ஸ் நிறுவனம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்