‘எங்களுக்கு வேற வழி தெரியல’.. ‘கொரோனா’ கொடுத்த பெரிய அடி.. உலகின் மிக ‘பிரபல’ நிறுவனம் எடுத்த முடிவு..!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனாவால் தொடர்ந்து விற்பனை சரிந்து வருவதால் பிரபல கார் நிறுவனம் 10 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் மிகவும் பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பிஎம்டபிள்யூ, ஜெர்மனி நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த கார் நிறுவனத்தின் கிளைகள் உலகின் பல்வேறு நாடுகளில் அமைந்துள்ளன. பிஎம்டபிள்யூ கார் நிறுவனத்தில் மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸால் அனைத்து துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாகனத்துறையில் விற்பனை இல்லாததால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதனால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி வருகிறது.
இந்நிலையில், கொரோனா காரணமாக போதிய விற்பனை இல்லாததால் பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது ஊழியர்களில் 10 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும், தானியங்கி காரை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகளையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்த முடிவு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் 1 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்!? குமறும் ஊழியர்கள்!.. முழு விவரம் உள்ளே
- எங்களால முடியல... 35,000 பேரை 'வீட்டுக்கு' அனுப்ப திட்டம்... பிரபல நிறுவனத்தின் முடிவால் 'அதிர்ச்சியில்' ஊழியர்கள்!
- 'வேலை தேடும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்காக'!.. 'தமிழக முதல்வர்' தொடங்கியுள்ள 'அசத்தல்' முயற்சி!
- "இந்த கொரோனா நேரத்துலயும், நெஞ்சுல பாலை வார்த்துட்டாங்க!"... 22 பில்லியன் டாலர் முதலீட்டில் அசத்திய 155 இந்திய நிறுவனங்கள்! .. நெகிழ்ந்துபோன அமெரிக்க வாழ் இந்தியர்கள்!
- "கொரோனாவால கம்பெனிகள் எல்லாம் ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு பண்ணிகிட்டு இருக்கு!".. ஆனா இந்த நிறுவனம் பண்றத பாருங்க! வேறலெவல்!
- கொரோனாவிற்கு மத்தியிலும்... ஐடி ஊழியர்களுக்கு 'நல்ல' செய்தி சொன்ன 'பிரபல' நிறுவனம்!
- 'செலவைக்' குறைக்க அதிரடி முடிவு... 10,000 ஊழியர்களை 'வீட்டுக்கு' அனுப்பும் பிரபல நிறுவனம்!
- ‘அரசு வேலைக்கு ஆசை’!.. மகன் போட்ட ‘மாஸ்டர்’ ப்ளான்.. விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்..!
- 'விருப்பமில்லாமல் 6,770 பேர்.. தானாக 5,520 பேர்'.. '12 ஆயிரம் ஊழியர்கள் வேலைநீக்கம்'.. ஆனாலும் அடுத்த 'குண்டை' தூக்கிப் போடும் 'ஏர்லைன்ஸ்' நிறுவனம்!
- 'ஐ.டி. ஊழியர்கள் ஜாக்கிரதை...' 'பணி நீக்க' அறிவிப்பை வெளியிட்ட 'நிறுவனம்...' 'எத்தனை பேர் நீக்கப்படுவார்கள்?...' 'வெளியேற்றப்படப் போவது யார்...?'