24 நாட்களுக்கு பின் ‘முதல்முறையாக’ குறைந்த பெட்ரோல், டீசல் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

தமிழகத்தில் 24 நாட்களாக மாற்றமின்றி விற்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை இன்று குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பெட்ரோல், டீசல் தேவை, சர்வதேச அளவில் குறைந்தது. இதனை அடுத்து கச்சா எண்ணெய் வினியோகத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள, உற்பத்தி நாடுகள் ஒப்பந்தம் செய்தன. இதன்காரணமாக, பெட்ரோல், டீசல் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்தது.

கடந்த மாதம் 27-ம் முதல் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு, 93.11 ரூபாயாகவும், டீசல் லிட்டருக்கு, 86.45 ரூபாயாகவும் விற்பனையாயின. இந்நிலையில் கடந்த 24 நாட்களாக மாற்றமின்றி தொடர்ந்த பெட்ரோல், டீசல் விலை இன்று குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து, 92.95 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து 86.29 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

இம்மாத தொடக்கத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 71 அமெரிக்க டாலரில் இருந்து, 64 டாலராக குறைந்தது. இதனை அடுத்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களும் குறைத்துள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்