எத்தனை நாள் வேணும்னாலும் ‘லீவ்’ எடுத்துக்கோங்க.. சம்பளத்தை எல்லாம் பிடிக்க மாட்டோம்.. ஊழியர்களுக்கு ‘இன்ப அதிர்ச்சி’ கொடுத்த பிரபல நிறுவனம்..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஓயோ நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதனால் தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மா நிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஓயோ (OYO) நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு ஒரு நற்செய்தியை தெரிவித்துள்ளது. அதன்படி ஓயோ நிறுவனத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக நடைமுறைத்தப்பட்டுள்ளது. இதில் புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு, பிற நாட்களில் பணியாற்றும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பரவி இந்த இக்கட்டான சூழலில், பலருக்கும் பல விதமான பாதிப்புகள் இருப்பதால், ஊழியர்கள் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என ஓயோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விடுமுறை நாட்களில் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்பட மாட்டாது என்று அந்நிறுவனத்தின் தலைவர் ரிதேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஊழியர்கள் விடுமுறை எடுக்க உள்ள தகவலை தங்களது மேனேஜரிடம் மட்டும் தெரிவித்தால் போதும் என்றும், வேலையை முடிக்க வேண்டிய கால அளவு குறித்து ஊழியர்கள் அழுத்தம் எடுத்தக்கொள்ள வேண்டாம் என்றும் ரிதேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்த வாரத்துக்கு 4 நாட்கள் வேலை, அடுத்த ஒரு மாதத்திற்கு நடைமுறையில் இருக்கும் என்றும், ஜூன் மாதம் நிலைமையை ஆய்வு செய்து தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓயோ நிறுவனத்தில் இந்த அறிவிப்பு, ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்