உலகின் முதல் 10 கோடீஸ்வரர்களின் சொத்து இரண்டு மடங்கு! 99% மக்கள் வருமானம் குறைந்தது.. காரணம் என்ன? அதிர்ச்சி ரிப்போர்ட்

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கொரோனா வைரசினால் உலகமே துன்பத்தை சந்தித்தாலும் பெரும் கோடீஸ்வரர்களுக்கு அது லாபம் தான். ஆக்ஸ்ஃபாம் வெளியிட்ட ஆய்வு முடிவு அதைத் தான் காட்டுகிறது.

Advertising
>
Advertising

ஸ்காட்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு நேற்றைய தினம்தொடங்கிய நிலையில் சமத்துவமற்ற சமூகம் குறித்த அறிக்கையை ஆக்ஸ்ஃபாம் வெளியி்ட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ''கொரோனா வைரசினால் உலகில் உள்ள முதல் 10 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அதே நேரம் , 99 சதவீத மக்களின் வருமானம் குறைந்துவிட்டது.

ஏழை மக்களின் சொத்துகளைவிட 6 மடங்கு 10 கோடீஸ்வரர்களிடம் உள்ளது:

வைரஸ் தொடங்கும்போது 70,000 கோடி டாலராக இருந்த 10 கோடீஸ்வரர்களின் சொத்து தற்போது 1.50 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளது. ஒரு வினாடிக்கு 15 ஆயிரம் டாலர் வீதமும், நாள் ஒன்றுக்கு 1300 கோடி டாலர் வீதமும் அதிகரித்துள்ளது. இந்த 10 கோடீஸ்வரர்களும் தங்களின் 99.99 சதவீத சொத்துகளை நாளையே இழந்தால்கூட, மீதமிருக்கும் அவர்களின் சொத்து, உலகில் உள்ள 99 சதவீத மக்களின் சொத்து மதிப்பை விட அதிகமாக இருக்கும். உலகில் உள்ள 310 கோடி ஏழை மக்களின் சொத்துகளைவிட 6 மடங்கு இந்த 10 கோடீஸ்வரர்களிடம் உள்ளது.

முதல் பத்து இடங்கள்:

கடந்த 14 ஆண்டுகளில் இந்த 10 கோடீஸ்வர்களின் சொத்து அதிகரித்ததைவிட, கொரோனா காலத்தில்தான் மிக வேகமாக அதிகரித்தது. அதாவது 5 லட்சம் டாலர் அளவுக்கு சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. 2021, நவம்பர் 3-ம் தேதி, ஃபோர்ப்ஸ் கணக்கின்படி, உலக கோடீஸ்வரர்களில் முதல் 10 இடங்களில் எலான் மக்ஸ், ஜெப் பிஜோஸ், பெர்நார்ட் அர்னால்ட் குடும்பத்தார், பில் கேட்ஸ், லாரி எலிஸன், லாரி பேஜ், செர்ஜி பிரின், மார்க் ஜூகர்பெர்க், ஸ்டீவ் பால்மெர், வாரன் பஃபெட் ஆகியோர் உள்ளனர்.

வருமானத்தை இழந்த பெண்கள்:

2020-ம் ஆண்டில் மட்டும் பெண்கள் ஒட்டுமொத்தமாக 80,000 கோடி டாலர் வருமானத்தை இழந்திருக்கிறார்கள். ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன் ஆகிய நாடுகளில் உள்ள 100 கோடி பெண்களின் சொத்துகளைவிட 252 ஆண்களிடம் அதிகமாக இருக்கிறது. இனப் பாகுபாட்டையும் இந்த கொரோனா வைரஸ் அதிகரித்துள்ளது. 2-இரண்டாவது அலையில், இங்கிலாந்தில், வங்கதேசத்தைச் பூர்வீமாகக் கொண்டவர்கள்தான் பூர்வீக வெள்ளையர்களைவிட 5 மடங்கு அதிகமாக உயிரிழந்திருப்பார்கள்.

பிரேசிலில் உள்ள கறுப்பினத்தவர்கள்தான் வெள்ளை இன மக்களைவிட 1.5 மடங்கு அதிகமாக உயிரிழந்துள்ளனர்''. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

CORONAVIRUS, OXFAM, MILLIONAIRES, CORONA, சொத்து, கோடீஸ்வரர்கள், பில் கேட்ஸ், மார்க் ஜூகர்பெர்க், எலான் மக்ஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்