'இந்த வருசமும் அவர் தான் நம்பர்-1...' 'இது மூணாவது தடவ...' - 'அமெரிக்காவோட டாப் பணக்காரங்க லிஸ்ட்ல...' - 7 இந்திய-அமெரிக்கர்கள்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்2020-ஆம் ஆண்டின் அமெரிக்காவில் இருக்கும் 400 பணக்காரர்களின் பட்டியலில் ஏழு இந்திய-அமெரிக்கர்கள் இடம் பெற்றுள்ளனர்.
2020-ஆம் ஆண்டின் ஃபோர்ப்ஸ் பட்டியலின் 400 பணக்காரர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 179 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்தார். பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பௌண்டேசன் 111 பில்லியன் மதிப்புடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
இந்த பட்டியலில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் 339 வது இடத்தில் உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இந்தியாவை பூர்விகமாக கொண்ட 7 இந்தியர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு.
61 வயதான சவுத்ரி 6.9 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் 85-வது இடத்தில் உள்ளார், மேலும் அவர் 2008-இல் இசட்ஸ்கேலரை நிறுவியதும் குறிப்பிடத்தக்கது.
73 வயதான வாத்வானி 400 பணக்காரர்கள் பட்டியலில் 238-வது இடத்தில் உள்ளார் மற்றும் இவரது நிகர மதிப்பு 3.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
299-வது இடத்தில், 46 வயதான ஷா, 2.8 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடையவர். ஷா ஒரு பில்லியனரான ஸ்டீவ் கோனைனுடன் 2002-இல் வணிகத்தைத் தொடங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
65 வயதான கோஸ்லா, 2.4 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் 353-வது இடத்தில் உள்ளார்.
359-வது இடத்தில் 63 வயதான ஸ்ரீராம் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் திகழ்கிறார். இந்தியாவில் பிறந்த ஸ்ரீராம் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் கணிதம் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
67 வயதான கங்வால் இந்த பட்டியலில் 359-வது இடத்தில் உள்ளார். அவரது நிகர மதிப்பு 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
359-வது இடத்தில் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் பூஸ்ரி என்பவர் உள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அந்த நாட்டையே இந்தியா முந்திடுச்சு, இப்படியே போனா'... 'இதுவரை இல்லாத பாதிப்பாக ஒரே நாளில்'... 'வெளியாகியுள்ள ஷாக் தகவல்!'...
- 'இந்த தடுப்பூசி பாதுகாப்பா இருக்கு'... 'தொடர்ந்து உயரும் பாதிப்புக்கு நடுவே'... 'நம்பிக்கை தரும் தகவலால் ஆய்வை தீவிரப்படுத்திய இந்தியா!'...
- 'செம்ம அடி!.. சீனாவுக்கு தாய்லாந்து வைத்த செக்!.. கேஆர்ஏ கால்வாய் திட்டம் ரத்து!'.. அடுத்தது என்ன?
- '1998ம் வருடம் 377 கருப்பின பங்குதாரர்கள் இருந்தாங்க!'.. 'உலகின் புகழ்பெற்ற 'உணவகத்துக்கு' எழுந்த புது சிக்கல்?.. பரபரப்பை கிளப்பியிருக்கும் வழக்கு!
- உங்க எல்லாருக்கும் நிரந்தரமா 'work from home' தான்,,.. 'இந்தியாவில்' முதல் முறையாக அறிவித்த முன்னணி 'நிறுவனம்'!!!
- Breaking: ‘முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மரணம்...’ - நினைவு திரும்பாமலே உயிர் பிரிந்தது...!
- “சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்!”.. அமெரிக்காவில் நீச்சல் குளம் அருகே நடந்த பயங்கர சம்பவம்.. நடந்தது என்ன?
- 'இந்தியாவிலிருந்து... இங்கிலாந்து 'பிரதமருக்கு' பறந்த 'suicide' மெயில்..,, அடுத்த '2' மணி நேரத்துல டெல்லி போலீஸ் செஞ்ச தரமான 'சம்பவம்'!!!
- 'இங்க உயிரிழப்பு கம்மியாக இருப்பதற்கு'... 'இதுகூட ஒரு காரணமா?'... 'ஆய்வு கூறும் புதிய ‘ஆச்சரிய’ தகவல்!'...
- 'எனக்கும் எனக்கும் கல்யாணம்...' 'இது என்னடா புதுசா இருக்கு...' 'மோதிரம் போட்டதெல்லாம் வேற லெவல்...' - அடுத்தது நடந்தது தான் செம ட்விஸ்ட்...!