“எல்லாம் ரெடியாகிக்குங்க... மொத்தமா ‘2000 பேர’ வேலைக்கு எடுக்குறோம்...!” - கொரோனா காலத்திலும் ‘குட் நியூஸ்’ சொன்ன ‘பிரபல’ நிறுவனம்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

பிரபல டாக்சி போக்குவரத்து நிறுவனமான ஓலா, எலெக்ட்ரிக் கார் வாடகை சேவைக்காக ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி என்ற சேவையை வழங்கி வருகிறது.

இந்நிலையில், ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி சார்பில் 2000 ஆயிரம் பேரை உலகளவில் பணிக்கு அமர்த்தவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 1000 இன்ஜினியர்களையும், மற்ற துறைகளுக்கு 1000 பேரையும் புதிதாக பணிக்கு தேர்வு செய்யவுள்ளது. கொரோனா தொற்று காரணமாக, பல முன்னணி நிறுவனங்கள் சரிவைக் கண்ட போதும், தங்களது தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் வாகனத் தொழில் துறையில் எலெக்ட்ரிக் வாகங்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கும் என்றும், அதற்காக தான் தற்போது புதிதாக வேலைக்கு ஆள் சேர்க்கவுள்ளதாகவும், ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல், வரும் காலங்களில் பல புதுமையான தயாரிப்புகளை வழங்கவும், மிக விரைவில் அதிக எலெக்ட்ரிக் இரு சக்கர வாகங்களின் தயாரிப்புகளை அதிகளவில் உற்பத்தி செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

முன்னதாக, கடந்த மே மாதம் கொரோனா தொற்றின் காரணமாக, ஓலா நிறுவனம் 33 சதவீத ஊழியர்களை, அதாவது 1400 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்