'ஜீரோ பேலன்ஸ் வைத்துக்கொள்ளலாம்'... 'ஏடிஎம்மில் பணம் எடுக்க கட்டணம் இல்லை'... 'நிதியமைச்சரின் இன்னும் பல முக்கிய அறிவிப்புகள்'!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வரும் சூழலில் இன்று செய்தியாளர்களை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சந்தித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
நிதி சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர், “வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 30, 2020 வரையில் வழங்கப்படும். காலதாமத கட்டண செலுத்துதலுக்கு வட்டி விகிதம் 12 சதவிகிதத்திலிருந்து 9 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
வருமான வரி சார்ந்த அத்தனைப் பணிகளுக்கும் ஜூன் 30-ம் தேதி வரையில் அவகாசம் வழங்கப்படும். இதேபோல், ஆதார் மற்றும் பான் இணைப்புக்கு ஜூன் 30, 2020 வரையில் கால அவகாசம் வழங்கப்படும். ஜிஎஸ்டி செலுத்துவோரில் 5 கோடிக்கும் குறைவான வருவாய் உள்ளோருக்கு வட்டி, பெனால்டி, தாமதக் கட்டணம் என எதுவும் விதிக்கப்படாது.
டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு எந்த வங்கியின் ஏ.டி.எம் மூலமும் சேவை கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம். அதேபோன்று வங்கியில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை அதாவது மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
மார்ச், ஏப்ரல், மற்றும் மே மாதங்களுக்கான ஜி.எஸ்.டி வரியை கட்டுவதற்கான கடைசி தேதியாக ஜூன் 30 -ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் தாமதமாக கட்டுவோருக்கு விதிக்கப்படும் வட்டி சதவிகிதமும் குறைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் நிதி சார்ந்த எமெர்ஜென்ஸி காலமாக அறிவிக்க வேண்டிய தேவை இந்தியாவில் ஏற்படவில்லை’ இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- குடும்ப அட்டைதாரர்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டட மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ‘நிவாரணம்’... முதலமைச்சர் ‘அறிவிப்பு’... விவரங்கள் உள்ளே...
- ‘கொரோனா அச்சுறுத்தல்’... ‘ரத்தான ரயில் டிக்கெட் கட்டணத்தை’... எப்படி திரும்ப பெறலாம்?
- ‘கொரோனா’ பரவலைத் தடுக்க... ‘இன்று’ முதல் ‘வங்கி’ வேலை நேரம், சேவையில் ‘மாற்றம்’... ‘விவரங்கள்’ உள்ளே...
- ‘பழைய’ விலையிலேயே... ‘டபுள்’ டேட்டா, டாக் டைம்... ‘பிரபல’ நிறுவனம் அறிவித்துள்ள ‘சூப்பர்’ ஆஃபர்கள்...
- ‘மொத்தமே 3 செகண்டுதான்’.. ‘கொரோனா பயத்துல அவசர அவசரமா..!’.. தஞ்சையை அதிரவைத்த வெளிநாட்டு தம்பதி..!
- 'உதவி செய்வதுபோல் நடந்துக் கொண்ட நபரால்'... 'சென்னையில் முதியவருக்கு நேர்ந்த அதிர்ச்சி'!
- ‘குரைக்காத’ நாயால் கிடைத்த ‘க்ளூ’... ‘மெட்டியை’ கூட விட்டுவைக்காமல் செய்த ‘நடுங்கவைக்கும்’ காரியம்... ‘யூடியூப்’ பார்த்தே செய்ததாக ‘அதிர்ச்சி’ வாக்குமூலம்...
- 'பொள்ளாச்சிக்கு இதுக்காகத் தான் வந்தேன்’... ‘கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது’... ‘பி.டெக்., எம்.பி.ஏ. படித்த இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்’!
- ‘எனக்கு கண்ணீர் வந்திருச்சு’!.. பள்ளியில் மாணவிக்கு நடந்த ‘பாராட்டு விழா’.. ‘சல்யூட்’ போட வைத்த மாணவியின் செயல்..!
- ‘ஒட்டுமொத்த’ குடும்பத்திற்கும் ‘அடுத்தடுத்து’ நேர்ந்த கொடூரம்... கடிதத்தில் இருந்த ‘உறையவைக்கும்’ காரணம்... ‘அதிரடி’ தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்...