'சம்பளம், போனஸ்ல நாங்க எதுவும் கை வைக்கல...' இங்க வொர்க் பண்ணி 'ரிட்டயர்ட்' ஆனவங்களுக்கும் 'அந்த விஷயத்தை' பண்றோம்...! - பிரபல கம்பெனியின் நிறுவனர் தகவல்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 44-ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று (24-06-2021) நடைபெற்ற நிலையில் முகேஷ் அம்பானியின் மனைவியும், ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனின் நிறுவனருமான நிடா அம்பானி பேசிய காணொளி தற்போது வைரலாகி உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பொதுக்கூட்டத்தில் இந்த கொரோனா காலத்தில் தங்கள் ஊழியர்களை இழந்ததை குறித்தும், அவர்களின் இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடிகளையும் குறித்து பேசியுள்ளனர்.
அதில், 'கோவிட்-10 கொள்ளை நோய் நம்மிடையே மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கி, மனிதநேயத்தையே கொரோனா பரிசோதித்துவிட்டது.
இந்த இக்கட்டான மற்றும் மோசமான காலகட்டத்திலும் நாம் மக்களாக ஒன்றிணைந்து போராடியுள்ளோம். நம்முடைய ஊழியர்களின் சம்பளம், போனஸ், இழப்பீடு என எதையும் நாங்கள் குறைக்கவில்லை.
அதோடு இந்த இரண்டாம் அலையில் மக்களுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டப்போது நாம் உயர்தர தூய்மையான மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்தோம்.
இதுவரை நாம் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ததில்லை. ஆனால் தேவை ஏற்பட்டபோது இரண்டே வாரங்களில் தினம் 1100 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்தோம்.
மேலும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தடுப்பூசி சுரக்ஷா திட்டத்தின் கீழ் ஓய்வுபெற்ற ஊழியர்கள், கூட்டணி நிறுவனங்களின் ஊழியர்கள், ஊழியர்களின் குடும்பங்கள் உள்பட 20 லட்சம் பேருக்கு இலவசமாக தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் செய்த காரியங்களை கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஊழியர்கள், அவங்க குடும்பத்தினருக்கும் இலவசம்’!.. ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்த ‘மெகா’ திட்டம்..!
- 'வருசத்துக்கு 75 கோடி ரூபாய் சம்பாத்தியம்...' 'கொரோனா பாஸிடிவ் வந்தப்போவே அந்த எண்ணம் வந்திடுச்சு...' - ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி எடுத்துள்ள முடிவு...!
- ‘ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இருக்கு’!.. மகாராஷ்டிரா முதல்வர் தெரிவித்ததும் ‘அதிரடி’ அறிவிப்பை வெளியிட்ட ரிலையன்ஸ் நிறுவனம்..!
- மீடியால வெளியான ‘அந்த நியூஸ்’ உண்மை இல்லங்க... ‘நீடா அம்பானி குறித்து வெளியான பரபரப்பு தகவல்...’ – விளக்கம் அளித்த ரிலையன்ஸ் நிறுவனம்...!
- 'நீங்க சந்தோசமா இருந்தா தான் நாங்க சந்தோசமா இருப்போம்'... ரிலையன்ஸ் பணியாளர்களுக்காக 'நீடா அம்பானி' எடுத்த முடிவு!
- ‘ஊழியர்கள் தான் எங்க சொத்து’!.. ரூ.700 கோடி மதிப்பில் ஸ்பெஷல் ‘போனஸ்’.. பிரபல ‘ஐடி’ நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!
- 'ஒரு மணி நேரத்திற்கு இத்தனை கோடியா'??... 'லாக்டவுன் நேரத்திலும் மனுஷன் வேற லெவல் பண்ணிட்டாரு யா'... ஆக்ஸ்ஃபாம் வெளியிட்ட தகவல்!
- “அதுக்கும் எங்களுக்கும் தொடர்பே கிடையாது!”.. ஊழியர்களுக்கும் சொத்துக்களுக்கும் பாதுகாப்பு கோரி.. நீதிமன்றத்தை நாடிய ரிலையன்ஸ்!
- ‘அமேசான் எங்கள அழிக்கப் பாக்குது!’.. வேதனை தெரிவித்து, பேட்டியின்போது பிரபல ரீடெயில் நிறுவனர் கூறிய பகீர் குற்றச்சாட்டு!
- 'முகேஷ் அம்பானிக்கு காத்திருந்த அதிர்ச்சி'... 'இப்படி ஒரு முறைகேடா'?... செபி காட்டிய அதிரடி!