நாளை முதல் 'ஏடிஎம்'ல பணம் எடுக்குறப்போ 'மொபைல்' கையில இருந்தாகணும்...! - 'முக்கிய' அறிவிப்பை வெளியிட்டுள்ள 'பிரபல' வங்கி...!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

10,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் எடுக்க புதிய நடைமுறையை பிரபல வங்கி நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertising
>
Advertising

சமீப காலங்களில் தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் திருடு போவது தொடர்கதையாகி வருகிறது. எளிதாக ஏடிஎம்-ல் பணம் எடுக்க தெரியாத முதியவர்களை குறி வைத்து சில கும்பல்கள் இயங்கி வருகிறது. எனவே அதிலிருந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்க எஸ்பிஐ வங்கி நிறுவனம் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

எஸ்பிஐ ATM-களில் பத்தாயிரத்துக்கு மேல் பணம் எடுக்கும் போது அக்கவுண்ட் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் அனுப்பப்படும் . ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இவ்வாறு தனியே ஓடிபி எண்ணை பெற்று பயன்படுத்த வேண்டும். சமீப காலமாக அதிகரித்து வரும் மோசடியில் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. 

மேலும், நாளை (01-12-2021) முதல் எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 99 ரூபாய் தனி வரி செலுத்த வேண்டும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, அனைத்து வணிகர் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கும் 99 ரூபாய் மற்றும் செயலாக்க கட்டணமாக வரி செலுத்த வேண்டும் என்ற எஸ்பிஐ வங்கி கூறியுள்ளது.

 

SBI, ATM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்