Oscar 2022 விருதை தட்டி தூக்கிய இந்தியரின் நிறுவனம்.. யாருப்பா இந்த நமித் மல்ஹோத்ரா?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

ஏழாவது முறையாக இந்தியர் ஒருவருடைய நிறுவனம் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது.

Advertising
>
Advertising

ஆஸ்கார் விருது

திரைத்துறையில் அளிக்கப்படும் மிக முக்கிய விருதுகளில் ஒன்று ஆஸ்கார். உலகம் முழுவதும் வெளியாகும் படங்களிலிருந்து சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து கலைஞர்களுக்கு விருது அளிக்கும் இந்த விழா ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான ஆஸ்கார் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. ஆஸ்கார் விழாவில் மொத்தம் 23 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

டியூன் (Dune)

1965 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஃபிராங்க் ஹெர்பெட் (Frank Herbert) என்னும் நாவலாசிரியர் எழுதிய Dune என்னும் நாவல் தற்போது படமாகியிருக்கிறது. இப்படத்தில் டிமோதி சாலமேட், ஜெண்டயா, ஆஸ்கார் ஐசக், ஜேசன் மோமோவா மற்றும் ரெபேக்கா பெர்குசன் ஆகியோர் நடித்துள்ளனர். ஆரம்பம் முதலே ஆஸ்கார் ஓட்டத்தில் இப்படம் ஆதிக்கம் செலுத்தும் என கூறப்பட்டு வந்த நிலையில், அதனை மெய்ப்பிக்கும் விதமாக மொத்தம் 6 ஆஸ்கார் விருதுகளை இந்தப் படம் வாங்கிக் குவித்து உள்ளது.

சிறந்த ஒலி, சிறந்த ஒரிஜனல் ஸ்கோர், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய 6 பிரிவுகளில் இந்த திரைப்படம் ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளது.

நமித் மல்ஹோத்ரா

Dune திரைப்படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை மேற்கொண்ட நிறுவனம் DNEG ஆகும். ஐக்கிய ராஜ்யத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்தியாவை சேர்ந்த நமித் மல்ஹோத்ரா ஆவார். இவர் பாலிவுட் தயாரிப்பாளர் நரேஷ் மல்ஹோத்ராவின் மகனும் ஒளிப்பதிவாளர் எம்.என்.மல்ஹோத்ராவின் பேரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னர் டபுள் நெகட்டிவ் என அழைக்கப்பட்ட இந்த DNEG நிறுவனத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு  நமித் வாங்கினார். இதுவரையில் இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லர், எக்ஸ் மிஷினா, பிளேட் ரன்னர் 2049, ஃபர்ஸ்ட் மென் மற்றும் டெனெட் ஆகிய ஆறு படங்களுக்காக சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் விருதினை இந்த நிறுவனம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது Dune திரைப்படத்திற்காக  ஆஸ்காரை DNEG நிறுவனம் வென்றிருக்கிறது.

OSCARS, OSCAR2022, DUNE, NAMITMALHOTRA, ஆஸ்கார், நமித்மல்ஹோத்ரா, டியூன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்