‘இதுவரைக்கும் யாரும் இத பண்ணதில்ல’!.. ‘கொடுத்த வாக்கை நிறைவேத்திட்டேன்’.. முகேஷ் அம்பானி சந்தோஷத்துக்கு காரணம் என்ன?
முகப்பு > செய்திகள் > வணிகம்ரிலையன்ஸ் நிறுவனம் முற்றிலும் கடன் இல்லாத நிறுவனமாக மாறியுள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ஜியோ பங்குகளை விற்பனை செய்தல் மற்றும் உரிமை வெளியீடு ஆகியவற்றின் மூலம் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் முதலீட்டாளர்களிடமிருந்து 1.68 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டியுள்ளது. இதன்மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் நிகர கடன் இல்லாத நிலையை அடைந்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களிடம், ‘2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிகர கடன் ஏதுமின்றி இருக்கும்’ என வாக்குறுதி அளித்திருந்தார். அந்த நிலையை குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே நிறைவேற்றியிருப்பதாக முகேஷ் அம்பானி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர கடன் மதிப்பு 2020ம் ஆண்டு மார்ச் 31ம் படி 1,61,035 கோடியாக இருந்தது. இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் பத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து 1,15,693.95 கோடி அளவுக்கு முதலீட்டையும், உரிமை வெளியீட்டின் மூலம் 53,124 கோடி ரூபாய்க்கும் மேல் நிதியை திரட்டியுள்ளது.
இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘உலகத்தில் இவ்வளவு குறிகிய காலத்தில் வேறு எந்த நிறுவனமும் இந்த அளவுக்கு மூலதன நிதியை திரட்டியதில்லை. இந்த சம்பவம் இதற்கு முன்பு நடைபெற்றதும் இல்லை. உலகமே COVID19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் இந்த சாதனை நிகழ்ந்திருக்கிறது. மொத்த நிதி திரட்டல் 1.75 லட்சம் கோடிக்கும் மேல் உள்ளது’ என குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக கூறிய முகேஷ் அம்பானி, ‘கடந்த சில வாரங்களாக ஜியோவுடன் கூட்டு சேர்வதில் உலகளாவிய நிதி முதலீட்டாளர் சமூகத்தின் தனித்துவமான ஆர்வத்தால் நாங்கள் பெருமை அடைந்துள்ளோம். பங்குதாரர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது என்பது ரிலையன்ஸ் நிறுவனத்தின் மரபணுவில் பதிந்த விஷயமாக இருக்கிறது. நிகர கடன் இல்லாத நிறுவனமாக மாறிய பெருமை உள்ள சூழலில், ரிலையன்ஸ் அதன் பொற்காலத்தில் இன்னும் லட்சிய வளர்ச்சி இலக்குகளை நிர்ணயித்து வெற்றி பெறுவோம். நிறுவனர் திருபாய் அம்பானியின் கனவுகளை நிறைவேற்றுவோம். இந்தியாவின் வளர்ச்சியில் நம் பங்களிப்பை தொடர்ந்து அதிகரிப்போம்’ என முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், உலகின் முன்னணி நிறுவனங்களான பேஸ்புக், சிலவர் லேக், விஸ்டா ஈக்யுடி பார்ட்னர்ஸ், ஜெனரல் அட்லான்ட்டிக், கேகேஆர், முபாடாலா, அடியா, டிபிஜி உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து 1,15,693.95 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டைப் பெற்றுள்ளது. இந்தியாவில் கடனே இல்லாத முதல் நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- முகேஷ் அம்பானி ‘Right Hand’.. வெற்றிக்கு மூளையாக செயல்படும் ‘ஓர் நபர்’.. அதிகம் வெளியே தெரியாத இவர் யார்..?
- ஊரடங்கால் சரிந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி!.. 'அம்பானி' போட்ட மாஸ்டர் ப்ளான்!.. அலறும் போட்டியாளர்கள்!.. தெறிக்கவிடும் புதிய திட்டம்!
- அதிக 'டேட்டா', அதிக 'வேலிடிட்டியுடன்'... புதிய 'சூப்பர்' பிளானை அறிமுகம் செய்துள்ள 'பிரபல' நிறுவனம்!...
- தினசரி 2 ஜிபி , 'அன்லிமிடெட்' கால்ஸ், இலவச எஸ்.எம்.எஸ்... அசத்தல் திட்டத்தை 'அறிமுகம்' செய்த நிறுவனம்!
- 'காசு, துட்டு, மணி' லாக்டவுனுக்கு மத்தியிலும்... 'பணமழையில்' நனையும் நிறுவனம்!
- 'ரீசார்ஜ் ஃபார் குட்'... 'உதவியாக' செய்யும் ஒவ்வொரு ரீசார்ஜிற்கும் 'கேஷ்பேக்' ஆஃபர்... 'பிரபல' நிறுவனம் அறிவிப்பு...
- 'கொரோனா' அச்சுறுத்தலிலும்... 'லாபம்' சம்பாதிக்கும் ஒரே 'இந்திய' தொழிலதிபர்!... என்ன 'காரணம்?'...
- 'வேலிடிட்டி' அதிகரிப்பு... 'இலவச' வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ்... பிரபல நிறுவனத்தின் 'அதிரடி' அறிவிப்பு...
- ‘ஏடிஎம் மெஷினிலேயே’... ‘இனி மொபைல் எண்ணுக்கு ரீசார்ஜ் செய்யலாம்’... 'புதிய வசதியை அறிமுகப்படுத்திய நிறுவனம்’!
- ‘2 வாரத்தில் 100 படுக்கைகள் கொண்ட ஹாஸ்பிட்டல்’.. ‘WorkFromHome பார்ப்பவர்களுக்கு ஜியோ மூலம்..!’.. வெளியான அதிரடி அறிவிப்பு..!