‘கொரோனா பீதி’!.. ‘ஒரேநாளில் சரிந்த சென்செக்ஸ்’.. கீழே இறங்கிய அம்பானி.. மறுபடியும் முதலிடத்தை பிடித்த பிரபல தொழிலதிபர்..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

ஆசியாவின் முதல் பணக்காரர் இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி கொரோனா வைரஸால் சரிவை சந்தித்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி முதல் இடத்தை பிடித்தார். இதற்கு முன்பாக சீனாவின் அலிபாபா குழுமத்தின் தலைவர் ஜேக் மா இருந்தார். தற்போது ரிலையன்ஸ் பங்குகளின் வீழ்ச்சியால் அம்பானி முதல் இடத்தை இழந்துள்ளார். இதனால் ஜேக் மா மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பல நாடுகள் விமான போக்குவரத்துக்கு கட்டுபாடுகளை விதித்துள்ளது. இதனால் சுற்றுலா, உற்பத்தி போன்ற துறைகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. போக்குவரத்து முடங்கியதால் கடந்த 12 வருடங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் சரிவை சந்தித்துள்ளது.

இதனால் நேற்று பங்கு சந்தையில் ஒரே நாளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் 5.6 பில்லியன் (44,000 கோடி ரூபாய்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் நிலவரப்படி முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 50 பில்லியன் டாலராக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது 42.2 பில்லியன் டாலராக அவரின் சொத்து மதிப்பு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

MUKESHAMBANI, JACKMA, CORONAVIRUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்