'தடுப்பூசி போட்டாச்சா'?... 'அப்போ கையோட இத கொண்டு வாங்க'... பிரபல ஐடி நிறுவனம் அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

டெல்டா வேரியன்ட் வைரஸ் மீண்டும் நாடு முழுவதும் பரவும் ஆபத்து இருப்பதால், அலுவலகம் மீண்டும் திறக்கும் தேதிகள் மறுபரிசீலனையில் உள்ளது.

கோவிட் ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு, அமெரிக்காவில் மீண்டும் அலுவலகங்கள் தொடங்கலாம் என்ற முடிவில் இருப்பதால், அனைத்து தொழில்நுட்ப பெரு நிறுவனங்களும், தங்களின் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்று அளிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளன.

நிறுவனத்துக்குத் திரும்பும் அனைத்து ஊழியர்களும், பார்வையாளர்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்று கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்த முடிவை, நிறுவனம் தன்னுடைய சமீபத்திய அறிக்கையில் வெளியிட்டது. மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்கள் மட்டுமில்லாமல், நிறுவன வளாகத்துக்குள் வரும் வெண்டார்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவரும் இந்த விதியை கடைப்பிடிக்க வேண்டும்.

இதற்கிடையே செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி மீண்டும் அலுவலகம் தொடங்கலாம் என்று முடிவில் இருந்தது. தற்போது, திறக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள அலுவலகத்தை அக்டோபர் 4 ஆம் தேதிக்கு மேல், மீண்டும் திறக்க இருப்பதாகக் கூறியுள்ளது. அதோடு உடல் நலக் கோளாறு அல்லது மருத்துவக் காரணத்துக்காக, கட்டாயமாகத் தடுப்பூசி செலுத்திக் கொள்வதிலிருந்து விலக்கு பெற்றவர்களுக்கு, நிறுவனமும் விலக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்