‘வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்தால் போதும்’.. ‘பிரபல ஐடி நிறுவனத்தின் அசத்தல் ஐடியா’..
முகப்பு > செய்திகள் > வணிகம்மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாரத்திற்கு 4 நாட்களாக பணியாளர்களின் வேலை நேரத்தைக் குறைத்ததால் 40 சதவிகிதம் பணியின் தரம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.
வாரத்திற்கு 5 நாட்கள் வேலை என்பதே பெரும்பாலான ஐடி நிறுவனங்களின் வழக்கம். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஜப்பானில் உள்ள தனது அலுவலம் ஒன்றில் பணியாளர்கள் வாரம் 4 நாட்கள் மட்டும் வேலை செய்தாலே போதும் என அறிவித்தது. இதையடுத்து அனைத்து பணியாளர்களுக்கும் வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்களுக்கு ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த முயற்சியால் தற்போது அந்த அலுவலகத்தில் பணியின் தரம் 40 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விடுமுறை, பிடித்த நேரம் வேலை செய்யலாம் போன்ற சலுகைகளால் பணியாளர்கள் விரயம் செய்யும் நேரம் 25.4 சதவிகிதம் குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் அத்துடன் கூடுதலாக மின் கட்டணம், பேப்பர் வேஸ்டேஜ் குறைவு போன்ற வேறு சில நன்மைகளும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் தங்கள் பணி நேரத்தை தங்களே நிர்ணயிப்பது அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நல்லது என அந்நிறுவனம் கூறியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘யூடியூப் நேரலையின்போது’.. ‘நொடிப்பொழுதில் இளைஞருக்கு நடந்த பயங்கரம்’..
- 'சென்னையிலிருந்து ஜப்பான்'... 'நேரடியாக தொடங்கப்பட்ட புதிய சேவை'... 'மகிழ்ச்சியில் பயணிகள்'!
- '500 பேரின் பணம் அம்பேல்!'.. 'ஆன்லைன் கேம் மூலம் நூதன மாற்றம்'.. சென்னையில் சிக்கிய கால் செண்டர் ஊழியர்கள்!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- 'ஒன்னுமே எழுதாத Assignment நோட்டுக்கு அதிக மார்க் ஏன்?'... ஒரே நாளில் உலக ஃபேமஸ் ஆன மாணவி!
- ‘பயங்கர விபத்தில்’.. ‘பயிற்சிக்காக வெளிநாடு சென்ற’.. ‘ஐடி பெண்ணுக்கு நடந்த விபரீதம்’..
- ‘வீட்டிலிருந்தே வேலை செய்யுங்க’... ‘ஐடி ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்’!
- ‘சிறுமி கையில் என்ன வைத்திருக்கிறார் எனத் தொடங்கிய ஏலத்தில்’.. ‘ரூ.177 கோடிக்கு விற்பனையான ஓவியம்’..
- 'இப்டியா டிரஸ் பண்ணுவாங்க'... 'நடுரோட்டில் ஐடி இளம்பெண்ணை மறித்து'... ‘சண்டையிட்ட நபர்’... வீடியோ!
- ‘பராமரிப்பு பணி காரணமாக’.. ‘29ஆம் தேதி 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து’.. ‘விவரங்கள் உள்ளே’..