மொத்தமா 1800 பேர்.. திடீரென வீட்டுக்கு அனுப்பிய முன்னணி நிறுவனம்.. வருத்தத்தில் ஊழியர்கள்.. பின்னணி என்ன??

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கொரோனா தொற்று உலகம் முழுவதிலும் பரவ ஆரம்பித்ததன் காரணமாக, உலகின் பல முன்னணி நிறுவனங்கள், கடும் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டது.

Advertising
>
Advertising

Also Read | ஒரே கிராமத்துல.. 30-க்கும் மேல இரட்டையர்கள்.. திகைத்து போன ஆய்வாளர்கள்.. "தமிழ்நாட்டில் இப்டி ஒரு அதிசய கிராமமா?"

இதன் காரணமாக, தங்களின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வேண்டும் என்பதற்காக, ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியும், மற்ற பலருக்கு நீண்ட நாள் விடுப்பும் வழங்கி இருந்தது.

கொரோனா தொற்றின் தாக்கம் ஒரு புறம், வேலையின்மை மறுபுறம் என ஏராளமான மக்கள், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் சிக்கிக் கொண்டனர்.

மைக்ரோசாப்ட் எடுத்த முடிவு

இதனைத் தொடர்ந்து, கொரோனா தொற்றின் பிடியில் இருந்து ஓரளவுக்கு நிலைமை சரியானதும் மீண்டும் புதிய ஊழியர்களை நியமித்தது முன்னணி நிறுவனங்கள். இந்நிலையில், பிரபல முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட், தங்களின் 1800 ஊழியர்களை தற்போது வேலை நீக்கம் செய்துள்ளதாக வெளி வந்த தகவல், பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இது தொடர்பாக வெளியான தகவலின் படி, தங்களின் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக, வெவ்வேறு இடங்களில் பணிபுரியும் சுமார் 1800 ஊழியர்களை மைக்ரோசாப்ட் பணி நீக்கம் செய்துள்ளது. ஜூன் 30 ஆம் தேதியுடன் தங்களின் நிதியாண்டு முடிவடைந்த பிறகு, வணிக குழுக்கள் மற்றும் மறு சீரமைத்தல் காரணமாக, சில பணியாளர்களை குறைத்துக் கொண்டதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

காரணம் என்ன??

ஆனால், அதே வேளையில் தொடர்ந்து இந்த ஆண்டில் நிறைய ஊழியர்களை புதிதாக எடுக்க உள்ளோம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில், மொத்தமாக 1.80 லட்சம் ஊழியர்கள் வேலை செய்து வரும் நிலையில், அதில் 1800 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது என்பது, அவர்களின் ஒரு சதவீத ஊழியர்களை குறைத்து கொள்வது என்பது தான். இதனையே, தங்களின் விளக்கமாக அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மற்ற நிறுவனங்களை போல, தாங்களும் வணிக முன்னுரிமைகள் அடிப்படையில் மதிப்பீடு செய்து, அதற்கேற்ப கட்டமைப்பு மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதற்காக, இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரபல நிறுவனத்தின் இந்த முடிவால், கன்சல்டிங், கஸ்டமர் அண்ட் பார்ட்னர் Solutions உள்ளிட்ட சில பிரிவுகளில் இருந்து ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதே வேளையில், அதிக முதலீடு செய்து, நிறைய ஊழியர்களை புதிதாக இந்த ஆண்டில் பணியமர்த்தவும் மைக்ரோசாப்ட் திட்டம் போட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | சுஷாந்த் சிங் வழக்கில் சிக்கும் நடிகை..? உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்திய NCB !!

MICROSOFT, MICROSOFT LAYS OFF 1800 EMPLOYEES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்