'சம்பளம் மட்டுமில்ல...' அதை தாண்டி இவ்வளவு மேட்டர் இருக்கா...! - 'மைக்ரோசாப்ட் கம்பெனியில work பண்ண ஆசைப்படுறதுக்கான அல்டிமேட் காரணங்கள்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்மைக்ரோசாப்ட் இந்தியா தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரியும் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட சர்வேயில் அந்நிறுவனத்தை பற்றியும், பணிபுரியும் ஊழியர்களின் மனநிலை குறித்தும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் தலைசிறந்த தொலைநுட்ப நிறுவனங்களில் ஒன்று மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம். Timesjob-ன் ஒரு அங்கமாக செயல்படும் ஒரு இணையதளம் மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவன ஊழியர்களிடம் நடத்திய ஆய்வில் மைக்ரோசாப்டில் மக்கள் எதனால் வேலை செய்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
ஆய்வறிக்கையில், மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்கள் ஒரு விஷயத்தை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கவும், அதில் வேறுபல புதுமையை புகுத்தி, அதன்மூலம் மாற்றங்களை ஏற்படுத்தி வேலை செய்வதன் வழியே வேலை செய்வதற்கான தகுந்த சூழலை உருவாக்குவதாக கூறுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் மைக்ரோசாப்டில் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட சோதனைகளை மேற்கொள்ள உரிய கால அவகாசமும், குறிப்பிட்ட காலநேரத்தில் செய்து முடிக்காவிட்டாலும், ஊழியர்களுக்கு நெருக்கடி தராது, தட்டிக்கொடுத்து சுதந்திரமாக பணியாற்றும் வாய்ப்பைப் பெறுவதாகவும் கூறுகின்றனர்.
மேலும் மைக்ரோசாப்டில் தற்போது பணி புரிபவர்கள் மற்றும் முதலில் பணி புரிந்தவர்களில் 18% சதவிகிதம் பேர் 'மைக்ரோசாப்ட்' என்ற பெயருக்காகவே வேலையில் சேர்ந்திருக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக ஒருவர் மேலதிகாரியாக இருந்தாலும் நேரடியாக அவரை தொடர்பு கொண்டு தங்களின் கருத்துக்களை முன்வைப்பதற்கான முழு சுதந்திரமும் கொடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதன்மூலம் அனைத்து தரப்பு ஊழியர்களிடையே நட்புணர்வு மற்றும் ஒத்துழைப்பு நல்கும் சூழ்நிலையை உருவாக்குகிறது. இதனால் எல்லோரும் முன்னை விட மகிழ்ச்சியாக வேலை செய்வதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மைக்ரோசாப் தொழிலாளர்களை ஊக்குவிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்பவர்கள் என்ற எண்ணமும் அனைத்து ஊழியர்களிடையே இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
மைக்ரோசாப்டில் மற்ற நிறுவனங்களில் ஒரு வேலைக்கு தரும் ஊதியத்துக்கு நிகராக அல்லது அதைவிட அதிகமாக தான் ஊதியம் தருகிறார்கள். மேலும் ஊழியர்களின் உடல்நலம் குறித்து கருத்தில் கொண்டு புகைப்பழக்கத்தை நிறுத்துவது குறித்து நிறையப் பயிற்சிகளை வழங்குகிறார்கள்.
அதே போல இந்த நேரத்தில் தான் வேலை செய்ய வேண்டும் என்று அவர்கள் நேரத்தை வரையறுப்பதில்லை மற்றும் தினமும் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதுமில்லை. மேலும் ஒரு ஊழியர் தன் மேற்படிப்பு,தொழில் சார்ந்த பயிற்சிகளையும் மேற்கொள்ள ஊக்குவிக்கின்றன.
மைக்ரோசாப்டில் வேலை புரியும் ஒருவருக்கு அந்த துறையில் வேலை இல்லையென்றால் இன்னொரு துறையில் பயிற்சி கொடுத்து அந்த துறையில் பணி அமர்த்துவார்கள். இவ்வாறு பணி செய்யும் வரை புதிதாக கற்றுக்கொண்டே இருப்பார்கள்.
இவ்வாறான கருத்துக்கள் மூலம் மைக்ரோசாப்டில் பணிபுரியும் ஊழியர்களின் மன நிலையும், மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் ஊழியர்களுக்கு கொடுக்கும் சலுகைகள் தான் அங்கே பணிபுரிய விருப்பப்படுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: கெத்தாக களமிறங்கும் Microsoft Surface Pro!.. Androidல இது வேற மாறி!.. அப்படி என்ன ஸ்பெஷல்?
- 'நிரந்தரமாக.. வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ணா'.. 'ஃபியூச்சர்ல இந்த பிரச்சனையெல்லாம் வரும்!'.. 'ஷாக்' கொடுத்த 'CEO'!
- ‘உங்களை பார்த்தா வியப்பா இருக்கு’... ‘பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பில்கேட்ஸ்’... ‘என்ன காரணம்?'
- 'வீடியோ கேம்' மூலம்... கல்வி கற்பது எப்படி!?'... மாநாட்டை மிரளவைத்து... 'சத்யா நாதெள்ளா'வை வியக்கவைத்த... 7ம் வகுப்பு சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு!
- ‘ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் 21 தடவை’!.. தமிழக இளைஞருக்கு நன்றி சொன்ன ‘மைக்ரோசாப்ட் சிஇஓ’.. அப்படி என்ன பண்ணாரு?
- 'இந்த விண்டோஸை உடைச்சிட்டா'... 'Microsoft-க்கு பெருகும் ஆதரவு'... அப்படி என்ன சொன்னார் நாதெல்லா?
- ‘வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்தால் போதும்’.. ‘பிரபல ஐடி நிறுவனத்தின் அசத்தல் ஐடியா’..