"நெலம சரியில்லங்க,,.. இப்போதைக்கு '18,000' பேர தூக்குறோம்",,.. 'முன்னணி' நிறுவனத்தின் முடிவால் அதிர்ச்சியில் உறைந்த 'ஊழியர்கள்'!!!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கொரோனா தொற்றின் காரணமாக உலகின் பல முன்னணி நிறுவனங்களின் வியாபாரம் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. விமான சேவைகள், போக்குவரத்து சேவைகள் உட்பட பல, கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், எம்.ஜி.எம் ரிசார்ட்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் 18,000 ஊழியர்களை தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில், அதிகம் பேர் ஹோட்டலில் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அந்த நிறுவனம் கடும் சரிவை சந்தித்துள்ளது.

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் , நெவாடா பகுதியில் அமைந்துள்ள கேசினோக்கள் மூடப்பட்ட நிலையில் 62 ஆயிரம் ஊழியர்களை தற்காலிகமாக பணிநீக்கம் செய்திருந்தது. அதில் பல கேசினோக்கள் கடந்த ஜூன் மாதம் திறந்த நிலையிலும், அதில் மிகக் குறைவான ஊழியர்களை மட்டுமே மீண்டும் பணிக்கு அமர்த்தியுள்ளனர். மிச்சம் பேரை பணியில் இருந்து மொத்தமாக நீக்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலால், 18,000 ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளதால் ஊழியர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். உலகின் கோடிக்கணக்கான மக்கள் வேலையிழந்து தவித்து வரும் நிலையில், கொரோனா தொற்றினால் தொடர்ந்து மக்கள் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்