"என்னை மன்னிச்சிடுங்க.. ஆனா வேற வழியில்லை".. 11,000 மெட்டா ஊழியர்களுக்கு மார்க் அனுப்பிய கடிதம்.. கலங்கிப்போன பணியாளர்கள்..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

பேஸ்புக், வாட்ஸாப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான மெட்டாவில் இருந்து 11,000 பணியாளர்களை மார்க் ஸக்கர்பெர்க் பணிநீக்கம் செய்திருப்பது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertising
>
Advertising

Also Read | "என் செல்போனை ஒட்டுக்கேக்குறாங்க".. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் பரபரப்பு குற்றச்சாட்டு.. முழு விவரம்..!

மார்க் ஸக்கர்பெர்க் தனது 19 வயதில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த போது, தனது நண்பர்களுடன் இணைந்து பேஸ்புக்கை உருவாக்கினார். முதலில் நண்பர்களுக்குள் உரையாடவும் படங்களை பகிரவும் பயன்படுத்தப்பட்ட இந்த சமூக வலை தளத்தை பின்னர் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தார் மார்க். அதன்பிறகு, வாட்சப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிரபல சமூக வலை தளங்களையும் கைப்பற்றியது பேஸ்புக். இந்த மூன்று சமூக வலை தளங்களுக்கும் தாய் நிறுவனமாக மெட்டா திகழ்கிறது. இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக மார்க் செயல்பட்டு வருகிறார்.

சமீப காலங்களில் அதிகமான ஊழியர்களை பணியில் சேர்த்தது மெட்டா. இதன் பலனாக கடந்த செப்டம்பர் இறுதியில் அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 87,314 ஆக  இருந்தது. இந்நிலையில், நேற்று நிறுவனத்தின் 13 சதவீத ஊழியர்கள் அல்லது 11,000 பேரை பணிநீக்கம் செய்வதாக மெட்டா அறிவித்தது. இதுதான் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் மெட்டாவெர்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஊழியர்களுக்கு மார்க் எழுதிய கடிதத்தில்,"இந்த முடிவுகளுக்கு நான் பொறுப்பேற்கிறேன். இது அனைவருக்கும் கடினமானது என்பதை நான் அறிவேன். குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் வருந்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்

மேலும், கொரோனா பெருந்தொற்று தொடக்கத்தில் ஏற்பட்ட இணைய வணிகம், இணைய பயன்பாடு அதிகரிப்பு ஆகியவை நிரந்தரமாக இருக்கும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால், பொருளாதார வீழ்ச்சி மற்றும் விளம்பரம் மூலமான வருவாய் இழப்பு அதிகமாகிவிட்டபடியால் இத்தகைய முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் மார்க்.

இதனிடையே, பணிநீக்கம் செய்யப்படும் மெட்டா ஊழியர்களுக்கு 4 மாத ஊதியம் வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் மனிதவள பிரிவு தலைவர் லோரி கோலர் அறிவித்திருக்கிறார். முன்னதாக ஸ்நாப்சேட் நிறுவனம் கடந்த ஆகஸ்ட்டில் 20 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. ட்விட்டர் நிறுவனம் கடந்த வாரம் 50 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்த நிலையில் மெட்டா நிறுவனம் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | "இந்தியா Vs பாகிஸ்தான் மேட்ச விடுங்க, இத பாருங்க".. இந்திய குடும்பத்திற்கு பாகிஸ்தானில் கெடச்ச வரவேற்பு!!.. Trending!!

META CEO, MARK ZUCKERBERG, META CEO MARK ZUCKERBERG, EMPLOYEES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்