'இந்தியாவில் 13,500 கோடி ரூபாய் மோசடி செய்த...' மெகுல் சோக்ஸி டோமினிகா சிறையில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டாரா...? - வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்...!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

இந்தியாவில் வங்கி கடன் பெற்றுக்கொண்டு மோசடி செய்யப்பட்டதாக தேடப்பட்ட வைர வியாபாரி மெகுல் சோக்ஸி டோமினிகா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு ஆண்டிகுவா பார்புடா திரும்பியுள்ளார்.

இந்தியாவில் இருந்து தப்பித்து சென்ற பின்னர் மெகுல் சோக்ஸி ஆண்டிகுவாவில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் வசித்து வருகிறார். அதன் அருகில் உள்ள டோமினிகா தீவில் இருப்பதாக தகவல் வெளியானதை ஒட்டி கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார்.

மெகுல் சோக்ஸிக்கு நரம்பியல் மருத்துவம் பார்ப்பதற்காக டோமினிகா நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதை தொடர்ந்து இந்திய மதிப்பில் சுமார் 2.50 லட்சம் ரூபாய் பிணை தொகை செலுத்திய பின்னர் அவர் தற்போது மீண்டும் ஆண்டிகுவா திரும்பியுள்ளார்.

இது அவரை இந்தியாவிற்கு கொண்டுவர மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவர் இந்தியாவில் வங்கிகளில் சுமார் 13,500 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக தேடப்பட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்