WhatsApp-ல் வர இருக்கும் 3 முக்கிய அம்சங்கள்.. மார்க் ஸக்கர்பெர்க் வெளியிட்ட அறிவிப்பு.. ஜாலி மோடில் நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்வாட்ஸாப்பில் புதிதாக 3 தனியுரிமை பாதுகாப்பு வசதிகளை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறார் மார்க் ஸக்கர்பெர்க். இதனால் நெட்டிசன்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.
Also Read | "இது எப்படி இங்க வந்துச்சு".. அட்லாண்டிக் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட வினோத உயிரினம்.. கலர்ஃபுல்லா இருக்கே..!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸாப் செயலியை உபயோகித்துக்கொண்டு வருகின்றனர். இந்த அப்ளிகேஷனின் பிரைவசி குறித்து தொடர்ந்து மெட்டா நிறுவனம் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. அதன் பலனாக அவ்வப்போது பிரைவசி அப்டேட் அளிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில், மெட்டா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஸக்கர்பெர்க் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு தற்போது வைரலாக பரவி வருகிறது.
3 முக்கிய அம்சங்கள்
மார்க் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி வாட்ஸாப் குழுக்களில் இருந்து நீங்கள் விலகும்போது அந்த தகவலை பிறர் அறியமுடியாத வகையில் புதிய அம்சம் கொன்டுவரப்பட இருக்கிறது. பொதுவாக வாட்ஸாப் குழுக்களில் இருந்து நாம் விலகும்போது குழுவில் இருப்பவர்கள் அதனை அறிவார்கள். ஆனால், இனி ஒருவர் விலகும் போது குழுவில் இருக்கும் அட்மினை தவிர பிறர் அறிய முடியாது.
அதேபோல, நீங்கள் ஆன்லைனில் இருக்கிறீர்களா என்பதை குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மறைக்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மார்க் அறிவித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல், ஒருமுறை மட்டுமே பார்க்கும்படியான செய்திகளை (view once messages) ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியாதபடி புதிய அப்டேட்டை அளிக்க இருப்பதாகவும் மார்க் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இப்புதிய அப்டேட் இந்த மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது.
பாதுகாப்பு
இதுகுறித்து மார்க் ஸக்கர்பெர்க் வெளியிட்டுள்ள பதிவில் பயனர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில்,"பயனர்களின் செய்திகளைப் பாதுகாப்பதற்கான புதிய வழிகளை உருவாக்கி, அவற்றை தனிப்பட்டதாகவும், நேருக்கு நேர் உரையாடல்களாக பாதுகாப்பாகவும் வைத்திருப்போம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னதாக வாட்ஸாப்பில் அனுப்பப்பட்ட மெசேஜை யாரும் அறியாத வண்ணம் அழிக்கும் Delete For Everyone வசதியில் அப்டேட் கொண்டுவர இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. அதாவது ஒருவருக்கு அனுப்பிய செய்தியை Delete For Everyone மூலம் அழிக்கும் போது எதிர்முனையில் இருப்பவருடைய அப்ளிகேஷனிலும் அந்த செய்தி அளிக்கப்படும். துவக்கத்தில் இந்த கால அளவு 7 நிமிடங்களாக இருந்தது. நீங்கள் அனுப்பிய மெசேஜை 7 நிமிடங்களுக்குள் Delete For Everyone மூலமாக எதிர் தரப்பில் இருப்பவருடைய அப்ளிகேஷனிலும் அழிக்கலாம். இந்த கால அளவை இரண்டு நாட்களாக நீட்டிக்க இருப்பதாக அந்நிறுவனம் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | "தூங்குனா போதும்.. சம்பளம் தர்றோம்".. திகைக்க வச்ச நிறுவனத்தின் Job ஆஃபர்.. படையெடுக்கும் நெட்டிசன்கள்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- முதல்'ல பேஸ்புக், அப்புறமா வாட்ஸ்அப்'ல.. வீடியோ காலில் வந்த பெண்??.. மறுநாளே தலையில் விழுந்த துண்டு
- வாட்சாப் அக்கவுண்ட்டை வாடகைக்கு விட்டு காசு பார்த்த திண்டுக்கல் இளைஞர்.. வீடுதேடி வந்த கொல்கத்தா காவல்துறை..திகைக்க வைக்கும் பின்னணி.!
- வாட்சாப்பில் லட்ச கணக்கில் பணம் கேட்ட மகள்.. அம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. "குட்நைட்" மெசேஜால் வெளிச்சத்துக்கு வந்த உண்மை..!
- முன்னாடி எலான் மஸ்க்.. இப்போ மார்க் சக்கர்பர்க்.. அடுத்தடுத்து வச்ச டார்கெட்..19 வயசு ஹேக்கரால் வந்த புதிய சிக்கல்..!
- எதுக்கு என் நம்பரை Block செஞ்ச?.. நண்பனின் வீட்டுக்கு வந்து கேள்விகேட்ட இளம்பெண் செஞ்ச பகீர் காரியம்..!
- ‘முதல்ல எமோஜி அப்டேட்.. இப்போ இதுவா..’ அடுத்தடுத்து பயனர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் WhatsApp..!
- வாட்ஸ் அப்பில் வந்தாச்சு செம அப்டேட்.. "இனி Chatting சும்மா பட்டையை கெளப்பும்.."
- அடடே! குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் Last Seen-அ மறைக்கலாமா?. செம வாட்சாப்பில் வரும் புதிய வசதி.. உற்சாகத்தில் மக்கள்..!
- போடு சக்க.. வாட்ஸாப்பில் இப்படி ஒரு புதிய வசதியா?.. யாருக்கெல்லாம் Applicable?
- ஆஹா.. இன்ஸ்டாகிராம்ல வர இருக்கும் புதிய தொழில்நுட்பம்... மார்க் சொன்ன செம்ம தகவல்..!