Premium செலுத்துவதில்... வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எல்ஐசி!.. என்ன திட்டம் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > வணிகம்பிரீமியம் செலுத்தாமல் கைவிடப்பட்ட பாலிசிக்களை மீண்டும் புதுப்பிக்க எல்ஐசி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எல்ஐசி முன்னெடுத்துள்ள Special Revival Campaign வரும் ஆகஸ்ட் 10ம் தேதி தொடங்கி, அக்டோபர் 9 2020இல் நிறைவடைகிறது. இதன் நோக்கமானது, பிரீமியம் செலுத்தாமல் செயலற்ற நிலையில் இருக்கும் Policy-களை மீண்டும் புதுப்பிக்க வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பளிப்பதாகும்.
அந்த வகையில், பிரீமியம் செலுத்த தவறிய முதல் தவணையிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் இருக்கும் குறிப்பிட்ட சில பாலிசிக்களுக்கு மட்டுமே இந்த Special Revival Campaign பொருந்தும். அதுமட்டுமின்றி, அவற்றிக்கு ரூ.2500 வரை சலுகையும் தரப்படுகிறது. தவிர்க்க முடியாத காரணங்களால் பிரீமியம் தொகையை கட்ட இயலாமல் இருந்தவர்களுக்கு இத்திட்டம் பெரிய உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும், அனைவருக்கும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் பயனடைய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக எல்ஐசி தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்