'காசெல்லாம் காலி'... 'இனி பண்ண ஒன்னும் இல்ல'... '19000 ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த'... 'பிரபல நிறுவனத்தின் அதிரடி முடிவு!'...
முகப்பு > செய்திகள் > வணிகம்அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 19000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் பல்வேறு விமான நிறுவனங்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதையடுத்து செலவை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் பல விமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. பல மாதங்களாக விமான போக்குவரத்து நடைபெறாததால் பல்வேறு நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்கள் திவாலாகி வரும் நிலையில், ஒரு சில விமான நிறுவனங்களுக்கு அந்நிறுவனத்தை சேர்ந்த நாடுகள் நிதி உதவி செய்து வருவதால் ஊழியர்களின் வேலை தப்பித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய விமான நிறுவனமான அமெரிக்கன் ஏர்லைஸும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், நிதி நிலையை சமாளிக்கவும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் அந்நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு 25 மில்லியன் டாலர்களை கடந்த மார்ச் மாதம் நிதியாக வழங்கியுள்ளது. அதைவைத்து சூழலை சில மாதங்களாக சமாளித்துவந்த நிலையில், அந்த நிதி அடுத்த மாதத்துடன் முடியவுள்ளதால், நிலைமையை சரிகட்ட மேலும் 25 மில்லியன் நிதியுதவி வழங்கவேண்டும் என அந்நிறுவனம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் அமெரிக்கன் ஏர்லைன்ஸுக்கு நிதியுதவி வழங்க அனுமதிப்பது தொடர்பாக முடிவெடுப்பதில் அரசுக்கு கால தாமதம் ஏற்பட்டுள்ளதால், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 19000 விமான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒருவேளை அதற்குள் அரசு நிதி வழங்கினால் இந்த வேலையிழப்பு தவிர்க்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 19000 பேர் வேலை இழக்கலாம் என்ற சூழல் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வீட்ல ஹார்ட் பேசன்ட் இருக்காங்க'... 'கொரோனா சிகிச்சை முடிந்து வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி'... சென்னையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிகழ்வு!
- வாவ், செம கிரியேட்டிவ் JOBS...! 'ஆன்லைன் கேமிங்ல வேலைவாய்ப்புகள், இன்னும் பல...' - நெஞ்சை குளிர வைக்கும் அறிவிப்பு...!
- 'தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு இடையிலும்'... 'அதிரடி நடவடிக்கைகளால்'... 'குறைந்த வேலை வாய்ப்பின்மை விகிதம்!'...
- 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...!
- 'அம்மா வீடு 4 நாளா திறக்கவே இல்ல'... 'மகள் கதவை உடைத்து பார்த்தபோது... 'அதிர்ச்சியில் ஆடிப்போன ஊர்மக்கள்!'...
- Oxford பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து தமிழகம் வருகிறது!.. 'இது' தான் ப்ளான்!.. தயார் நிலையில் மருத்துவர்கள்!
- 'இப்படியே போச்சுனா எத்தனை பேர் 'ரோட்டு'க்கு வருவாங்க தெரியுமா!? கொடிகட்டி பறந்தவங்களுக்கே இந்த நிலையா'?.. மோசமான நெருக்கடியில் நிறுவனங்கள்!.. 'பகீர்' தகவல்!
- “ஒழிஞ்சுதுனு நம்பி பள்ளிகள திறந்தோம்!”.. “அம்புட்டுதேன்.. இப்ப வெச்சு செய்யுது”.. - 'புலி வால புடிச்ச கதையா' திண்டாடி வரும் நாடு!
- 'உலகிலேயே முதல்முதலாக இப்படி ஆகியிருக்கு'... ' 4 மாதங்களுக்கு பின் அதிர்ச்சி கொடுத்த கொரோனா'... 'ஆய்வாளர்கள் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!'...
- 'துர்நாற்றம் தாங்கல'... 'சுத்தம் செய்தபோது கிடைத்ததை பார்த்து'... 'உறைந்துபோன ஊர்மக்கள்'... 'இளைஞர் செய்த பகீர் காரியம்!'...