'1.85 லட்சம் IT Employees-க்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்!!!'... 'Wipro-வின் அறிவிப்பால்'... 'குஷியான ஊழியர்கள்...!!!'

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனம் ஒன்று இந்த ஆண்டு டிசம்பரில் அதன் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ இந்த ஆண்டு டிசம்பரில் அதன் உயர் செயல்திறன் கொண்ட ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. விப்ரோவின் இந்த நடவடிக்கையானது கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் வணிக தொடர்ச்சியினை பராமரிப்பதற்காக ஊழியர்களுக்கு வெகுமதி அளிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் விப்ரோ நிறுவனம் டிசம்பர் 1, 2020 முதல் பி3 ஊழியர்களுக்கு புரோமோஷன் கொடுக்க உள்ளதாகவும், டீம் ரெயின்போ ஊழியர்களுக்கு கன்பர்மேஷன் உயர்வுகள் கொடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்களான 1.8 லட்சம் ஊழியர்களில், சுமார் 80% அதாவது  1.45 லட்சம் பேர் பி3 ஊழியர்கள் ஆவார்கள்.

முன்னதாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு சம்பள உயர்வு கால வரையின்றி தாமதமாகும் எனவும், எனினும் அனைத்து கேம்பஸ் வேலைகளையும் கெளரவிப்பதாக விப்ரோ உறுதியளித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் காரணமாக விப்ரோவின் 98% ஊழியர்கள் தொடர்ந்து வீட்டிலிருந்து பணியாற்றி வரும் நிலையில், இந்த நிறுவனத்தின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி, இதை ஒரு நீண்டகால நிகழ்வாக பார்க்கவில்லை எனவும், அவர்கள் அலுவலகங்களுக்கு திரும்புவது முக்கியம் எனவும் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்