'கொரோனா நெருக்கடியிலும்'... 'டாப் IT நிறுவனத்தின்'... 'திக்குமுக்காட வைத்துள்ள அறிவிப்பு!!'... 'ஊழியர்கள் அத்தனை பேரும் செம ஹேப்பி!!!'...

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கொரோனா பாதிப்புக்கு நடுவிலும் இன்ஃபோசிஸ் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியை வெளியிட்டுள்ளது.

நாட்டின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் வெளியிட்டுள்ள அதன் இரண்டாவது காலாண்டு அறிக்கையின் படி செப்டம்பர் காலாண்டில், அதன் நிகரலாபம் 20.50% அதிகரித்து, 4,845 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 4,019 கோடி ரூபாயாக இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிறுவனத்தின் நிகரலாபம், ரூபாய் வருவாய், டாலர் வருவாய், மார்ஜின் என அனைத்தும் எதிர்பார்த்ததை விட அதிகமாகும்.

இந்த இரண்டாவது காலாண்டில் வருவாய் கடந்த ஆண்டினை விட 8.60% அதிகரித்து 24,570 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதே டாலரில் 3,312 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளதோடு நிலையான கரன்சி வருவாய் கடந்த காலாண்டோடு ஒப்பிடும்போது 4.0% அதிகரித்துள்ளது. இதுவே கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 2.2% அதிகரித்துள்ளது. இதே இயக்க லாபம் கடந்த ஆண்டினை விட 20.7% அதிகரித்து, 840 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதே பேசிக் இபிஎஸ் விகிதம் கடந்த ஆண்டினை விட 14.90% காணப்படுவதுடன் கடந்த காலாண்டினை விட 17% அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்ஃபோசிஸ் நிறுவனம் ஜனவரி 1லிருந்து அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுகளை தர உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சலீல் பரேக், டிசம்பர் காலாண்டில் ஊழியர்களுக்கு ஸ்பெஷல் போனஸ் கொடுக்க உள்ளதாகவும், அனைத்து ஊழியர்களுக்கும் ஜனவரி 1லிருந்து சம்பள உயர்வு கொடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இதுபற்றிப் பேசியுள்ள அவர், "எங்களுடைய இரண்டாவது காலாண்டு முடிவு எங்களுடைய செயல்திறனை காண்பிக்கிறது. அதோடு எங்களுடைய டிஜிட்டல் வளர்ச்சி மற்றும் கிளவுட் சேவையானது வளர்ச்சிக்கு மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்தது. குறிப்பாக டிஜிட்டல் சேவையில் இருந்து வருவாய் 25.4% அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்த வளர்ச்சியானது தொடரலாம். இந்த நெருக்கடியான நேரத்திலும் கூட, எங்களுடைய ஊழியர்களின் கடினமான உழைப்பு இந்த வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருந்துள்ளது. எங்களுடைய ஊழியர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்