'கொரோனாவால் அதிரடி திட்டத்தை கையிலெடுக்கும் இன்ஃபோசிஸ்?!!'... 'அசத்தல் அறிவிப்பால் மகிழ்ச்சியில் ஐடி ஊழியர்கள்!!!'...

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

இன்ஃபோசிஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக சில துறை சார்ந்த ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்துவரும் நிலையில், குறிப்பாக ஐடி ஊழியர்கள் பலரும் வீட்டிலிருந்தே பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு ஒரு நெகிழ்வான ஹைபிரிட் (Hybrid Work Model) வேலை மாதிரியை கொண்டு வர திட்டமிடுவதாக தெரிவித்துள்ளது. இது எதிர்காலத்தில் அப்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு, ஊழியர்களை வீட்டில் இருந்தோ அல்லது அலுவலகத்தில் இருந்தோ பணியாற்ற அனுமதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, நெகிழ்வான ஹைபிரிட் வேலை மாதிரி என்பது பல்வேறு நேரங்களில் வெவ்வேறு இடங்களில் இருந்து தங்கள் ஊழியர்களை வேலை செய்ய அனுமதிப்பதாகும். இதுபற்றி பேசியுள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான சலீல் பரேக், "எங்கள் நிறுவனம் ஒரு நெகிழ்வான கலப்பின (Flexible Hybrid Work Model) வேலை மாதிரியை உருவாக்கியுள்ளது. மேலும் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து நிறுவனம் இதில் கவனம் செலுத்தும். இதன்மூலம் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்க முடியும். நாங்கள் கொரோனா பாதிப்பை கருத்தில் கொள்ள வேண்டுமென நினைக்கிறோம். மேலும் அலுவலக சூழலும் எங்களுக்கு தேவை. அதனால் நாங்கள் இன்னும் சரியான அணுகுமுறையை முடிவு செய்ய வில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டிசிஎஸ் நிறுவனம் 2025 வரை தனது ஊழியர்களில் 75 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணியாற்றுவார்கள் எனக் கூறியிருந்த நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனமும் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதோடு, மைக்ரோசாப்ட் நிறுவனமும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஊழியர்களின் வசதிக்கேற்ப பணியாற்றும் சூழலை வடிவமைத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட உள்ளது எனவும், அதே சமயம் ஊழியர்கள் ஒன்றாக அமர்ந்து வேலை செய்யும்போது கிடைக்கும் பலன்களையும் நாங்கள் அறிவோம் எனவும் கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்