'IT ஊழியர்களுக்கு இது செம சான்ஸ்!'... 'அடுத்தடுத்து பிரபல நிறுவனங்கள் வெளியிட்டுள்ள'... 'அசத்தல் அறிவிப்புகள்!!!'...

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

டிசிஎஸ், அமேசான், மார்கன் ஸ்டான்லி, வால்மார்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பணியமர்த்தல் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளன.

கொரோனா நெருக்கடியால் நாட்டில் நிலவி வரும் வேலையின்மைக்கு நடுவில் ஐடி துறையில் அவ்வப்போது பணியமர்த்தல் இருந்து வருவது சற்றே ஆறுதல் தரும் விஷயமாகவே உள்ளது. இந்நிலையில் டிசிஎஸ், அமேசான், மார்கன் ஸ்டான்லி, வால்மார்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பணியமர்த்தல் குறித்து ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளன.

ஐடி துறையினை பொறுத்த வரையில் கொரோனாவிற்கு பின்பு பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அதிகளவில் டிஜிட்டலுக்கு வாடிக்கையாளர்கள் மாறி வருவதாகவும், விப்ரோ சில தினங்களுக்கு முன்பு ஒரு அறிக்கையில் கூறியிருந்தது. இதையடுத்து தற்போது  மேற்கூறிய நிறுவனங்கள் டேட்டா சயின்டிஸ்ட் வேலைக்கு தேவை அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளன. அது மட்டுமின்றி இந்த டேட்டா சயின்டிஸ்டுகளுக்கான வாய்ப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் தெரிவித்துள்ளன.

இது டிஜிட்டல் வர்த்தகம் மேம்பட்டு வரும் நிலையில் வந்துள்ளதாகவும் இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதுவும் குறிப்பாக டெக் நிறுவனங்களில் இந்த டேட்டா சயின்டிஸ்ட்களுக்கான வாய்ப்புகள் வரும் காலத்திலும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஐடி ஊழியர்கள் தங்களது திறனை வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்